Labels

rp

Blogging Tips 2017

தாய்லாந்தில் பள்ளி மாணவர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட வித்தியாசமான கிறிஸ்துமஸ் மரம் : கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்தது

தாய்லாந்தில் 850-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களைக் கொண்டு, வித்தியாசமான முறையில் கிறிஸ்துமஸ் மரம் வடிவமைக்கப்பட்டு, புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், உலகம் முழுவதும் அதற்கான கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. கேக் தயாரிப்பது, மின்னொளி அலங்காரங்கள் என உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தாய்லாந்தில் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. 852 மாணவர்களை கொண்டு, இந்த மனித மரம் வடிவமைக்கப்பட்டது.


பாங்காக்கில், சியாம் பாரகன் வணிக வளாகத்தில் நடைபெற்ற இந்த வித்தியாசமான கிறிஸ்துமஸ் மர வடிவமைப்பை காண, கின்னஸ் உலக சாதனை நடுவர் ஃபோருனா புர்கே, லண்டனிலிருந்து பாங்காக் வந்துள்ளார். மாணவர்களின் இந்த வித்தியாசமான முயற்சி, கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளதாக நடுவர் அறிவித்தார். முன்னதாக ஜெர்மனியில் இதேபோன்ற கிறிஸ்துமஸ் மரம் 672 பேரை கொண்டு வடிவமைக்கப்பட்டதுதான் கின்னஸ் சாதனையாக இருந்தத

No comments:

Post a comment