Labels

rp

Blogging Tips 2017

சீர்காழி பகுதியில் 25 ஓராசிரியர் பள்ளி துவக்கம்.

சீர்காழி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யின் நிதி உதவியுடன் பிரன்ட்ஸ் ஆப் டிரைபல் சொசைட்டி தொண்டு நிறுவனம் மூலம் கிராமங்களில் ஓராசிரியர் பள்ளி துவக்குவதற்கான விழா
சீர்காழியில்
நடைபெற்றது. வங்கி பொதுமேலாளர் குப்தா தலைமை வகித்தார்.


முதுநிலை மண்டல மேலாளர் சிவசாமி, முதன்மை மேலாளர் ரவீந்திரன் முன்னிலை வகித்தனர். பிரன்ட்ஸ் ஆப் டிரைபல் சொசைட்டி செயலாளர் மாதவன் வரவேற்றார். சீர்காழி, காவோரிபூம்பட்டினம், கொள்ளிடம் பகுதிகளில் 25 பள்ளிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஓராசிரியர் பள்ளி மூலம் பள்ளி செல்லும், பள்ளி செல்லா மாணவ, மாணவிகளுக்கு தினந்தோறும் 3 மணி நேரம் வகுப்புகள் நடத்தி புத்தக கல்வி மட்டுமல்லாமல், சுகாதாரம், சுத்தம், சுயவேலைவாய்ப்பு பயிற்சி, நிதிநிலை கல்வி, மற்றும் அரசு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. முடிவில் சங்கத்தின் நிர்வாகி பூபதி நன்றி கூறினார்.

No comments:

Post a comment