Labels

rp

Blogging Tips 2017

ஒருலட்சம் பார்வைகளை நம் இணையதளம் 6 மாதங்களில் அடைய ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி!...

ஒருலட்சம் ,100,000 பார்வைகள்
 
பார்வைகளை நம் இணையதளம் ஆரம்பித்த 6 மாதத்தில் அடைய நேரடியாகவும் முகம் தெரியாத பலர் தொலைவிலிருந்தும் உதவி ஆதரவளித்த ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும், அனைத்து கல்வித்துறை அலுவலர்களுக்கும், கல்வித்துறை அலுவலகங்களுக்கும், கல்வித்துறை இயக்கங்களுக்கும், கல்வித்துறைக்கும், தமிழக அரசுக்கும், ஆசிரிய சங்கங்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை நம் www.tntf.in இங்கு, இன்று பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறது. 

                                                                                                                                                                                       மேலும் இந்த அடைவிற்கு உங்கள் அன்பும், வாழ்த்தும், ஆதரவும் தான் அடித்தளங்கள் என்பதையும் இங்கு வலுவாக பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தொடர்ந்து தங்கள் அனைவரின் வாழ்த்தையும் ஆதரவினையும் ஊக்கத்தையும் உவப்போடு எதிர்பார்கிறோம். குறிப்பாக இந்த தளம் சிறப்போடு செயல்பட ஆதரவளித்த அன்பர் ”ஆசிரியர் குரல்” முகநூல் நண்பர் அவர்களுக்கும்,சிறப்பாக செயல்படுத்திவரும் திரு.ரக்‌ஷித்.கே.பி மாநிலத்துணைத்தலைவர்-(வடக்கு மண்டலம்) அவர்களுக்கும் ,திரு.சாந்தகுமார் தலைமை நிலைய செயலர் அவர்களுக்கும் நன்றிகள் பல
 
 www.taakkootani.blogspot.com என ஆரபிக்கப்பட்ட இவ்வலைதளத்தை   www.tntf.in 
என பெயர்மாற்ரம் செய்ய உதவிய  நண்பர் tnkalvi சதிஷ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!!!!!!!
இப்படிக்கு,
வலைதள செய்தி வெளியீட்டுக்குழு,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a comment