Labels

rp

Blogging Tips 2017

கல்வி அதிகாரிகள் விசாரணை சிறப்பு வகுப்புக்கு அழைத்து மாணவிக்கு ஆங்கில ஆசிரியர் முத்தமழை


நாகர்கோவில் அருகே சிறப்பு வகுப்புக்கு வந்த மாணவியை வகுப்பறையில் வைத்து ஆசிரியர் கட்டி பிடித்து முத்தமழை பொழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் கருங்கல் பகுதியை சேர்ந்த ஒருவர் ஆங்கில ஆசிரியராக உள்ளார். இவர் கடந்த 17ம் தேதி 10ம் வகுப்பு மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு வைத்து இருந்தார். அன்றைய தினம் நாகராஜா கோயில் தேரோட்டத்தையொட்டி குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.


சிறப்பு வகுப்புக்கு வந்த மாணவிகளுக்கு தேர்வு வைத்து, தனித்தனியாக அழைத்து அவர்களது தவறுகளை சுட்டி காட்டினார். அப்போது தனியாக வந்த மாணவி ஒருவரை ஆசிரியர் திடீரென வகுப்பறையில் வைத்து கட்டி பிடித்து சரமாரியாக முத்த மழை பொழிந்தார். இதை எதிர்பார்க்காத மாணவி ஆசிரியரின் பிடியில் இருந்து தப்பி வெளியே ஓடினார். அவர் பதற்றமாக இருந்ததை பார்த்து மற்ற மாணவிகள் விசாரித்தனர். இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. கடந்த 29ம் தேதி மாணவியின் பெற்றோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று புகார் அளித்தனர்.

அப்போது அந்த ஆசிரியர், மாணவியின் தவறை சுட்டி காட்டினேன். அவர் என் மீது பொய் புகார் அளிக்கிறார் என கூறினார். மறுநாளில் இருந்து அந்த ஆசிரியர் பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். எனவே இதில் மேல் நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.

No comments:

Post a comment