Labels

rp

Blogging Tips 2017

கர்நாடக சட்டப்பேரவையில் கவர்னர் அறிவிப்பு பியுசி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்

பியுசி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக் நோட்பேட் வழங்கப்படும் என்று கர்நாடக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கர்நாடக பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆளுநர் பரத்வாஜ் சட்டப் பேரவையின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.ஆளுநர் ஆற்றிய உரை:மாணவ, மாணவிகள் இணையதளத்தின் வாயிலாக அறிவை வளர்த்துக்கொள்ள உதவும் வகையில் பியுசி (முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு) படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக் நோட்பேட் (ஐபேட் போன்றது) வழங்கப்படும். பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்
பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும். 24 மாவட்டங்களில் மகளிர் கல்லூரி அமைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறது.

உயர் கல்வி தரத்தை மேம்படுத்த தார்வாரில் உயர் கல்வி அகாடமி அமைக்கப்பட உள்ளது. கல்லூரிகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறப்பு தொழில்முனைவு பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.செயற்கைக்கோள் சார்ந்த கல்வி அனைத்து முதல்தர கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. புதிய தொழில்கொள்கையை உருவாக்கி அடுத்த ஐந்தாண்டுகளில் 10 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலீடுகளை ஈர்க்க இந்தாண்டு அக்டோபரில் முதலீட்டாளர் மாநாடு பெங்களூரில் நடைபெற உள்ளது.

No comments:

Post a comment