Labels

rp

Blogging Tips 2017

இன்று திருவண்ணாமலை மாவட்ட டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்தனர்


திருவண்ணாமலை மாவட்ட டிட்டோஜாக் பேரணி பிப்ரவரி 2ம் தேதி ஞாயிறு காலை 10.மணியளவில் திண்டிவனம் சாலை இரயிவே கேட் முன்பிருந்து தொடங்கி பழைய புற வழிச்சாலை வழியாக வேட்டவலம் சாலை சந்திப்பு சென்று அங்கிருந்து திருவள்ளுவர் சிலையில் முடிவடையும்.
அங்கே டிட்டோஜாக் மாநில பார்வையாளர் திரு சேகர் அவர்கள் கோரிக்கை விளக்க உரையும், மாவட்ட டிட்டோஜாக் பொறுப்பாளர்களின் விளக்க உரையும் நடைபெறும்

பின்னர் கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம், மாவட்ட டிட்டொஜாக் பொறுப்பாளர்களுடன் மாநில பார்வையாளர் அவர்கள் வழங்க உள்ளனர்.



கோரிக்கை மனுவிணை நேரில் சந்தித்து வழங்க ஏதுவாக 02.02.2014 ஞாயிறு அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரம் ஒதுக்கித்தருமாறு வேண்டி மனுவுடன் இன்று மாவட்ட டிட்டோஜாக் பொறுப்பாளர்கள்

1.திரு.கே.பி ரக்‌ஷித் மாவட்டச்செயலர்,தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,

2.திரு .கு.கலையரசன்.மாவட்ட டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட செயலர்,தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்,

3. திருஆர்,தமிழ்செல்வன்,மாவட்டத்தலைவர்,தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்,

4.திரு.இர.அண்னாதுரை.மாவட்டசெயலர்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்

5.திரு எஸ்.டேவிட் ராஜன்,தமிழ்நாடு ஆரம்மப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

ஆகியோர் கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியர் அவர்களை
“மாவட்ட ஆட்சியர் வளமணை(இல்லத்தில்) யில் சந்தித்து வழங்கினர்.

மதிப்புமிகு ஆட்சியர் அவர்கள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று அமரச்செய்து,விண்னப்பம், கோரிக்கை துண்டறிக்கை ஆகியவற்றினை படித்துப்பார்த்து பின்னர் தான்02.02.2014 அன்று இங்கிருப்பதாகவும்(தற்போதைய நிரல்படி) தாங்கள் தாரளமாக வந்து சந்திக்கலாம் என கூறி நேர்முக உதவியாளரிடம் குறிப்பெடுக்கவும் கூறி அவரது அலைபேசி எண்ணை நாம் பெற்ருச்செள்ளுமாறும் கூறினார்,
இயக்கப்பொறுப்பாளர்கள் ஆட்சியருக்கு நன்றி கூறி மகிழ்வுடன் திரும்பினர்.

தகவல் -.திரு.கே.பி ரக்‌ஷித் மாவட்டச்செயலர்,தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,

No comments:

Post a comment