Labels

rp

Blogging Tips 2017

திருவண்ணாமலை பௌர்ணமி நாட்களில் நகரத்தில் இயங்கும் தொடக்க/நடுநிலைப்பள்ளிகளுக்கு காலை 8.30 முதல் மதியம்1.00 மணி வரை மட்டுமே இயங்க ஏதுவாக அனுமதி வேண்டி இயக்குனரிடம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை-

பௌர்ணமி என்றால் திருவண்னாமலைஎனும் அளவிற்கு இன்று திருவண்ணாமலை கிரிவலம் புகழ் பெற்றுள்ளது.
அன்றையதினம் பல லட்சம் மக்கள் கிரிவலம் வர கூடுகிறார்கள்,
கிரிவலப்பாதையிலேயே
8 நகராட்சி தொடக்க நடுநிலைப்பள்ளிகள் இயங்குகின்றன
பிற பள்ளிகள் திருவண்ணாமலைக்கு வரும் முக்கிய சாலைகளில் இயங்குகிறது.
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவல நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம், வாகனங்களின் தொடர் அணிவகுப்பு, போக்குவரத்து நெரிசல், வியாபாரத்திற்காக தற்காலிக க்கடைகள் திடீர் தோற்றம்-இது வாடிக்கை
இதனால்
தொடக்க /நடுநிலைப்பள்ளிகள் செயல் படுவதில் பெறும் சிக்கல் உள்ளது
குறிப்பாக மானவர்கள் வீட்டிற்கு 4.10 க்கு பிறகு செல்வதில் கடினம்,
கிரிவலப்பாதையில் உள்ள பள்ளிகட்ட்கு மாணவர்களை மதிய பாட வேளைக்கு பெற்றோர்கள் அணுப்பாமை

கிரிவலம் செல்;ல மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து செல்லுதல்
கூட்ட நெரிசலில் சினஞ் சிறிய மானவர்கள் சிக்குவதால் மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சம்.
நகரில் உள்ள தனியார் சுயநிதிப்பள்ளிகள் அனைத்தும் ஒரு வேளை இயங்குவதால் அதேப்போன்று விடுமுறை விட பெற்றோர்களின் கோரிக்கை
ஆகியனவற்றி னை

கருத்தில் கொண்டு
மாதந்தோறும் பௌர்னமி நாட்களில் நகரில் இயங்கும் நகராட்சி தொடக்க நடுநிலைப்பள்ளிகட்கு மட்டும்,காலை8.30 க்கு தொடங்கி 1.000 மணி வரை இயங்கும் விதத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் திமலை,நகரக்கிளை மற்றூம் மாவட்டக்கிளை சார்பில் பொதுச்செயலர் மூலமாக அனுமதி கோரப்பட்டது
அதற்கு இயக்குனர்
கோரிக்கையின் உண்மைத்தன்மையை உணர்ந்து
முறையாக விண்ணப்பம் இயக்கத்தின் சார்பில் மாவட்டம் ,மாநில அளவில் தீர்மானம் இயற்றி அளிக்கவும் என்றும் அதனை அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்பி அரசின் ஆணை பெற தக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதி கூறினார்.
வரும் மே-3 ந்ந்தேதி நடை பெறும் மாநில செயர்குழுவில் இது குறித்து திமலை மாவட்டம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு மாநில தீர்மானம் இயற்றப்பட்டு அரசின் கல்வி செயலர் மற்றும் இயக்குனர் அவர்கட்கு அனுப்ப உள்ளதாக தி ம லை மாவட்ட செயலரும்,மாநில துணைத்தலைவருமான கே.பி.ரக்‌ஷித் அவர்கள் தெரிவித்தார்
திமலை மாவட்ட இக்கோரிக்கையை இயக்குனரிடம் வலியுருத்திய நமது பொதுச்செயலருக்கு திமலை நகரக்கிளை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது
தகவல் கே.பி.ரக்‌ஷித்

No comments:

Post a comment