Labels

rp

Blogging Tips 2017

ஆசிரியர்கள் சம்பளம் பெறும் கணக்கு உள்ள வங்கியில் தனி நபர் கடன் பெற ஏதுவாக உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் ஊதிய சான்று மறுப்பின்றி வழங்க உத்திடவிட வேண்டி தொடக்கக்கல்வி இயக்குனரிடம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்-

நேற்று(17.04.2014)அன்று மதியம் 100 மணியளவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி.Ex.MLCதலைமையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடன் சந்திப்பு-உடன் மாநிலதுணைத்தலைவர் திரு கே.பி.ரக்‌ஷித்,தலைமை நிலைய செயலர் திரு க.சாந்தகுமார் மற்றும் போளூர் வட்டார பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது
ஆசிரியர்கள் குடும்பத்தில் விழா,மற்றும் பிள்ளைகளின் கல்வி செலவு என ஏற்படும் செலவுகளை ஈடு செய்ய வங்கியில் தனி நபர் கடன்(personal loan) பெற வசதி உள்ளது


வங்கி கொடுக்க முன் வந்தாலும் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் ஊதியச்சான்று தர முன் வருவதில்லை.
இப்பிரச்சிணை தீர
ஆசிரியர் ECSமூலம் சம்பளம் பெறும் கணக்கு உள்ள வங்கியில் தனி நபர் கடன்(personal loan) பெற்றால் அக்கணக்கிலிருந்தே ஊதியம் வந்தவுடன் தவணைத்தொகை பிடித்தம் செய்யும் வசதி உள்ளதால்
அதுபோன்று
ஆசிரியர்கள் சம்பளம் பெறும் கணக்கு உள்ள வங்கியில் தனி நபர் கடன் பெற ஏதுவாக ஆசிரியர்கள் கேட்கும் போது உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் ஊதிய சான்று மறுப்பின்றி வழங்க உத்திடவிட வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குனரிடம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் விடுக்கப்பட்டது
அதற்கு இயக்குனர்
கடனை
ஊழியர் செலுத்த தவறும் போது
சம்பளம் வழங்கும் அலுவலர்
ஊதியத்தில் பிடித்தம் செய்து
கட்டுவதாக
உறுதி மொழி தர
இயலாது என்ற நிபந்தனையுடன்
ஊதியச்சான்று எந்த வங்கிக்கு கேட்டாலும் கொடுக்கச்சொல்வதாகவும்
கூறினார்.
தகவல் திரு கே.பி.ரக்‌ஷித்

No comments:

Post a comment