Labels

rp

Blogging Tips 2017

அ.இ.அதி.மு.க முன்னால் அமைச்சரும் சிதம்பரம் நாடளுமன்றத்தொகுதி பொருப்பாலர் திரு செங்கோட்டையன் அவர்கள் நமது பொதுச்செயலர் திருமிகு.செ.முத்துசாமி அவர்களுடம் தொலைபேசியில் பேச்சு.

இன்று காலை அ.இ.அதி.மு.க முன்னாள் அமைச்சரும் சிதம்பரம் நாடாளுமன்றத்தொகுதி பொறுப்பாளருமான திரு செங்கோட்டையன் அவர்கள் நமது பொதுச்செயலர் திருமிகு.செ முத்துசாமி அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு .இந்த மக்களவைத்தேர்தலில் அ.இ.அ.தி.முக விற்கு ஆதரவளிக்க  கேட்டுக்கொண்டார்
அதற்கு நமது பொதுச்செயலர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் இதுவரை எந்த அரசியல் இயக்கத்திற்கு சார்பாக அறிக்கை கொடுத்ததில்லை என்றும். ஆசிரியர் விருப்பத்தில் தலையிட்டதில்லை என்றும் ஆசிரியர் நலனில் அக்கறை கொள்ளும் அரசைப்பாரட்டவும் நன்றி தெரிவிக்கவும் என்றும் தயங்கியதில்லை என அவரிடம் தெரிவித்தார்.
சிதம்பரம் தொகுதி ஆசிரியர்கள் பொதுச்செயலரிடம் பேச்சு
அதன் பிறகு சிதம்பரம் தொகுதி ஆசிரியர்கள் பொதுச்செயலரை தொடர்புகொண்டு முன்னாள் அமைச்சர் இது சார்பாக மீண்டும் பேசுவதாக தெரிவித்தனர் அதற்கு அவ்வாசிரியர்களிடம் நமது பொதுச்செயலர்
சென்ற ஆட்சியின் முதல்வர் 2008ஆம் ஆண்டில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு எள் முனையளவும் குறையாமல் வழங்கப்படும் என கோட்டையிலே கொடியேற்றி அறிவித்தார்.ஆனால் அவ்வாறு வழங்கவில்லை.

பிரகு அமைக்கப்பட்ட குறை தீர் குழுக்களும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு வழங்கி விட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்காமல் ஏமாற்றியது.
குறைவுபட்ட ஊதியத்தை வழங்க வேண்டி கோரிக்கை வைத்து போராடியும், கடைசிவரை வழங்காமலே அவரது ஆட்சி முடிந்தது.
அதேபோல் ஊதியக்குறைபாடுகள் களையப்படும் என்றும்,பங்களிப்பு ஓய்வூதியம் ரத்துசெய்யப்படும் என்று சட்டமன்றத்தேர்தலின்போது பொதுக்கூட்டத்தில் வாக்குறுதி அளித்த தற்போதைய தமிழக முதல்வர் அம்மா அவர்கள் ஆட்சிக்கு வந்து இது நாள் வரை அதுபற்றி எந்த வித அறிவிப்பு வெளியிடாமல் உள்ளது அனைவரும் அறிந்ததே.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான குறைவுபட்ட ஊதியத்தை வழங்க வேண்டியும் பங்களிப்பு ஓய்வூதியம் ரத்துசெய்து பழைய முறையே அமுல்படுத்த கோரிக்கை வைத்து அனைத்து ஆசிரியர் சங்கங்கள் தனித்தும் இனைந்தும் போராடிவருகின்றன.
தற்போது
1. இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியமும்
2. பங்களிப்பு ஓய்வூதியம் ரத்துசெய்து பழைய முறையே அமுல்படுத்தப்படும்
என்ற வாக்குறுதி அளிக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் பாதிக்கப்பட்ட இரண்டு லட்சம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களும் ஆதரவளிப்பார்கள் என்று கூறுமாறு அவ்வாசிரியர்களைக்கேட்டுக்கொண்டார்

No comments:

Post a comment