Labels

rp

Blogging Tips 2017

இன்றைய தமிழகமுதல்வரும் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் அம்மா உள்ளிட்ட அனைத்து கட்சிதலைவர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணிபொதுச்செயலர் செ.முத்து சாமி கடிதம் மூலம் வேண்டுகோள்.

மக்களவைத்தேர்தல் சூடுபிடிக்கத்துவங்கியுள்ல இந்த வேளையில்
தமிழக் இடைநிலை ஆசிரியர் ஊதியக்குறைபாட்டுநிலை மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்  ரத்துசெய்யப்படவேண்டும் என்பது குறித்து அனைத்து கட்சி தலைமைகளுக்கும் கோரிக்கை கடிதம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பாக அதன் பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி அவர்கள் கடிதம் எழுதி உள்ளார்

கடித விவரம்


சென்ற ஆட்சியின் முதல்வர் 2008ஆம் ஆண்டில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு எள் முனையளவும் குறையாமல் வழங்கப்படும் என கோட்டையிலே கொடியேற்றி அறிவித்தார்.ஆனால் அவ்வாறு வழங்கவில்லை.

பிரகு அமைக்கப்பட்ட குறை தீர் குழுக்களும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு வழங்கி விட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்காமல் ஏமாற்றியது.
குறைவுபட்ட ஊதியத்தை வழங்க வேண்டி கோரிக்கை வைத்து போராடியும், கடைசிவரை வழங்காமலே அவரது ஆட்சி முடிந்தது.
அதேபோல் ஊதியக்குறைபாடுகள் களையப்படும் என்றும்,பங்களிப்பு ஓய்வூதியம் ரத்துசெய்யப்படும் என்று சட்டமன்றத்தேர்தலின்போது பொதுக்கூட்டத்தில் வாக்குறுதி அளித்த தற்போதைய தமிழக முதல்வர் அம்மா அவர்கள் ஆட்சிக்கு வந்து இது நாள் வரை அதுபற்றி எந்த வித அறிவிப்பு வெளியிடாமல் உள்ளது அனைவரும் அறிந்ததே.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான குறைவுபட்ட ஊதியத்தை வழங்க வேண்டியும் பங்களிப்பு ஓய்வூதியம் ரத்துசெய்து பழைய முறையே அமுல்படுத்த கோரிக்கை வைத்து அனைத்து ஆசிரியர் சங்கங்கள் தனித்தும் இனைந்தும் போராடிவருகின்றன.
தற்போது
1. இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியமும்
2. பங்களிப்பு ஓய்வூதியம் ரத்துசெய்து பழைய முறையே அமுல்படுத்தப்படும்
என்ற வாக்குறுதி அளிக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் பாதிக்கப்பட்ட இரண்டு லட்சம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களும் ஆதரவளிப்பார்கள் என்று  நம்புவதாக தெரிவித்துள்ளார்

எனவே இது குறித்து அரசியல் கட்சிகள்  தேர்தல் பிரச்சாரத்தின் போது  தங்கள் நிலைப்பாட்டை வெளியிடும் என்று  அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆவலாக உள்ளதை சுட்டிக்காட்டி  தங்கள் நிலைப்பாட்டை வெளியிட வேண்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்

No comments:

Post a comment