Labels

rp

Blogging Tips 2017

மாவட்டந்தோறும் மலிவு விலை மெடிக்கல் திறக்கிறது மத்திய அரசு



உயிர் காக்கும் மருந்துகள் விலையை 40 சதவீதம் வரை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், மாவட்டந்தோறும் மலிவு விலை மருந்தகங்கள் திறக்க உள்ளதாகவும் மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்தார்.

மருந்துகளின் விலையை குறைப்பது அரசின் முதல் முன்னுரிமையாக இருக்கும். குறிப்பாக உயிர்காக்கும் மருந்துகளின் விலையை 25 சதவீதம் முதல் 40 சதவீதம்வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் தலா ஒரு மலிவு விலை மெடிக்கல்கள் திறக்கப்பட்டு அதன் மூலம் குறைந்த விலை மருந்துகள் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மலிவு விலை மருந்தகங்களில் 500 வகையான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும். இவ்வாறு அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்தார்

No comments:

Post a comment