Labels

rp

Blogging Tips 2017

பல்கலைக்கழக அளவில் லஞ்ச ஒழிப்பை பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு

லஞ்ச ஒழிப்பை கொள்கையாக அறிவித்து வெற்றிபெற்ற நரேந்திர மோடியின் அரசு, லஞ்ச ஒழிப்பை பல்கலைக்கழக அளவில் பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு இது தொடர்பாக அனைத்து துணைவேந்தர்களுக்கும் ஏற்கனவே கடிதம் எழுதிவிட்டது. இதனை சட்டம், பொது நிர்வாகம், மனித உரிமைகள் ஆகிய பாடங்களில் சேர்க்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த சமூகத்தில் ஒரு உறுதியான மாற்றத்தை கொண்டு வரவும், எந்த வகையிலும் லஞ்சத்தை எதிர்த்து போராட மாணவர்களுக்கு உதவும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே பல்கலைக்கழக மானியக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a comment