சளி: நீங்கள் சளி தொல்லையால் அதிகம் அவதிபடுபவரா? கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.
கண் பார்வை: பார்வையில் பிரச்சனை உள்ளவர்கள் நாம் உண்ணும் உணவில் சேர்த்திருக்கும் கருவேப்பிலையை தூக்கி எறியாமல் உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
இனிய குரல்: பச்சை கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் குரல் இனிமையாகும்.
எடை குறைவு: உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களானது கரைந்து உடல் உடை குறைய ஆரம்பிக்கும்.
நீரிழிவு: நீரிழிவு நோயாளிகள் அதிகளவு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டியிருக்கும். மாத்திரையின் அளவை குறைக்க தினமும் காலை மற்றும் மாலையில் 10 கறிவேப்பிலை இலையை சாப்பிட்டு வந்தால் மாத்திரையின் அளவை பாதியாக குறைக்கலாம்.
வெள்ளை முடி: வெள்ளைமுடியை தடுக்க கறிவேப்பிலைகளை போட்டு காய்ச்சிய எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால் பரம்பரை நரை முடி வருவதைக்கூட தடுக்கலாம்.
உடல் சூடு: கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி, பின் அந்த எண்ணெயை தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் சூட்டை கட்டுபடுத்தி உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
இதயநோய்: கறிவேப்பிலை இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களை கரைக்கும்தன்மை கொண்டதால் இதனை உணவில் அதிகம் சேர்த்து வர, இதய நோய்க்கான அபாயத்தை குறைக்கும்.
புற்றுநோய்: கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்றுநோயை ஆரம்பத்திலேயே கொன்றுவிடும் ஆற்றல் மிக்கது.
No comments:
Post a comment