Labels

rp

Blogging Tips 2017

பல கல்வித்துறை அலுவலகங்களில் நடப்பது என்ன? ஆசிரியருக்கு யார் எதிரி -ஆசிரியர்களின் புலம்பல்

நன்றி-ஜயபிரகாஷ் முகநூல் பக்கத்தில்

https://www.facebook.com/profile.php?id=100006502930093

புதிதாக ஆசிரியர் பணிக்கு சேர அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்து appointment வாங்கும் முறை மாறி TET Exam. எழுதி வேலைக்கு வந்தவுடன் முதலில் அதிகாரி, அலுவலர்களுக்கு sweet,kaaram,coffeeல் லஞ்சம் வழங்க தொடங்குகின்றனர், அந்த ஆசிரியர்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்வதற்கு பல லட்சங்கள் அரசியல்வாதிகளுக்கு, அதிகாரிகளுக்கு, தகுதிகாண் பருவம் முடித்து ஆர்டர் போட, PF Loan போட, surrender போட, மேற்படிப்பிற்கு முன் அனுமதி பெற, மேற்படிபிற்க்கு ஊக்க ஊதிய உயர்வு பெற, b.ed. teaching practice க்கு E.L. போட, B.ED incentive போட, மேற்படிப்பு சான்றிதழ் geniueness பெற,விழா முன் பணம் பெற, arrears பெற, Inspectionக்கு வந்தால் ஆசிரியர்கள் எண்ணிக்கைக்கு தக்கவாறு லஞ்சம், passport க்கு NOC பெற, retirement benefit பெற , மற்றும் பல ..........
இது போன்று ஒரு விலைபட்டியல் வைக்கலாமே

1.பணியேற்பு பணி ஆணை பெற 5௦௦
2. தகுதிகாண் பருவம் ஆணை பெற 5௦௦
3. ஒப்படைப்பு விடுப்பு 15 நாட்கள் 100
30 நாட்கள் 200
4. b.ed முன் அனுமதி பெற 300
5. b.ed teaching practice 300
6. p.f. loan 50,000 to 1,00,000 100
1,00,000 to 2,00,000 200
above 500
7 .Genuineness பெற 100
8. ஊக்க ஊதிய உயர்வு பெற 300
9. தேர்வு நிலை, சிறப்பு நிலை பெற 500
10.transferக்கு relieve order பெற 500
11 retirement benefit பெற ?
( விலைபட்டியல் அந்தந்த இடத்திருக்கு மாறுபட்டது )

அதிகாரிகள், அலுவலர்களுக்கு லஞ்சம் வழுங்குவதால் அவர்கள் மீது மதிப்பும் பயமும் இல்லாமல் போய்விடுகிறது
நேர்மையான பைசா கூட வாங்காத அதிகாரிகளுக்கு பைத்தியக்காரன் என்று பட்டம் வழங்கிவிடுகிறோம்.

அதிகாரிகள் ஒரு கல்வி மாவட்டதிற்குள் வந்துவிட்டால் கைபேசியில் தகவல்கள் உடனுக்குடன் பறக்கின்றது. எதனால்? நாம் உண்மையாக உழைத்தால் பயப்பட வேண்டியதில்லையே. லஞ்சம் தர வேண்டியதில்லையே
நமது அரசாங்கம்(கல்வித்துறை) நம்மிடம் மன்றாடி கேட்பது மாணவர்களிடம் வாசிப்பு திறன் மட்டுமே. மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். உங்கள் மாணவர்களிடம் வாசிப்பு திறன் உள்ளதா...
இத்தனை சங்கங்கள் இருந்தும் இந்நிலை. பல சங்க நிர்வாகிகள் அதிகாரிகள் லஞ்சம் பெற துணை நிற்கிறார்கள். மறுக்க முடியுமா ...

No comments:

Post a comment