Labels

rp

Blogging Tips 2017

கணிதத்தில் மொத்தமாக மதிப்பெண் அள்ளுவது எப்படி?

நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம் பொறுப்பேற்றவுடன், மந்திரி சபையில் யார் மனிதவள மேம்பாட்டு மந்திரியாக நியமிக்கப்படப்போகிறார்? என்பது, நாடு முழுவதிலும் உள்ள கல்வித்துறையில் ஆர்வம்கொண்ட அனைவராலும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த பொறுப்புக்கு ஸ்மிரிதி இரானி அறிவிக்கப்பட்டு, அவர் பொறுப்பேற்றவுடன் பலத்த விமர்சனங்கள் கிளம்பியது. நாடு முழுவதிலும் தொடக்கக்கல்வி உள்பட உயர்கல்வி வரை இந்த அமைச்சரவையின் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது.
ஒரு மாடலாகவும், டெலிவிஷன் நடிகையாகவும், உயர்கல்வி அதிகம் படிக்காத ஸ்மிரிதி இரானியால் இதை சமாளிக்க முடியுமா?, முன்அனுபவம் எதுவும் இல்லாதவராயிற்றே என்றெல்லாம் பல குறைபாடுகள் கூறப்பட்டன. ஆனால், பாராளுமன்றத்திலும், நிர்வாகத்திலும் கல்வி தொடர்பான எல்லாவித பொருள் பற்றியும், இந்தியிலும், ஆங்கிலத்திலும் சரளமாக அவர் ஆற்றும் உரையும், புதுப்புது அறிவிப்புகள் வெளியிடும் பாங்கும் எல்லோரையும் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்பட வைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு அவர் பிறப்பித்துள்ள ஒரு உத்தரவு, இதுவரையில் யார் மனதிலும் தோன்றாத ஒன்றாகும்.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த, எத்தனையோ தியாகிகள், தலைவர்கள் பற்றி பொதுமக்களுக்கு தெரிகிறது. ஆனால், வெளியே வராமல் பலருடைய வீர தீர போராட்டங்களும், தியாகங்களும் மங்கிக்கிடக்கிறது. ஆங்கிலத்தில் ‘அன் சங் ஹீரோ’ என்று சொல்வார்கள். அதாவது, ‘வெளியே தெரியாத வீரதீரர்கள்’. அதுபோன்றவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை எல்லாம், அதிலும் குறிப்பாக அவர்களது வீரமிக்க செயல்களை எல்லாம் வீர கதைகள் என்ற பெயரில் பாடப்புத்தகங்களாக தயாரிக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ராணுவ அமைச்சகத்தின் உதவியை பெற்று, சுதந்திர போராட்டத்தின்போது யார் யாரெல்லாம் உயிர் தியாகம் செய்தார்கள் என்ற விவரத்தை சேகரியுங்கள் என்று இந்த கவுன்சில் கூட்டத்தில் கூறியிருக்கிறார். இதுமட்டுமல்லாமல், எத்தனையோ பெண் சாதனையாளர்கள் பற்றியும் உலகுக்கு தெரியாமல் போய்விட்டது.
இப்போதுள்ள சந்ததிக்கும், எதிர்கால சந்ததிக்கும், இந்தப்பெண் சாதனையாளர்கள் யார்–யார்?, வீர தீரமிக்க செயல்களை செய்தவர்கள் யார்–யார்? என்பதெல்லாம் கண்டிப்பாக தெரியவேண்டும். வெளியே தெரியாத தியாகிகள் வரலாறும் சரி, பெண் சாதனையாளர்கள் வரலாறும் சரி, குடத்தில் இடப்பட்ட விளக்காக இல்லாமல், குன்றில் ஏற்றப்பட்ட விளக்காக இருக்கவேண்டும் என்றால், நிச்சயமாக அவர்கள் வரலாறுகள், பள்ளிக்கூட மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டால்தான், எல்லோருக்கும் தெரியவரும் என்ற வகையில், இந்த உத்தரவை பிறப்பித்த அவருக்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக, 1986–ம் ஆண்டு தீவிரவாதிகள் மும்பையில் இருந்து சென்ற ஒரு விமானத்தை கடத்தி, கராச்சியில் தரையிறக்கி தாக்குதல் நடத்திய நேரத்தில், துப்பாக்கி குண்டு மழையில் இருந்து பயணிகளை மட்டுமல்லாமல், 3 இளம் குழந்தைகள் மீது துப்பாக்கி குண்டு பாயப்போகும் நேரத்தில், அவர்களை காப்பாற்றுவதற்காக, அவர்கள் முன்னால் ஒரு கேடயம்போல நின்று, தன் உடலில் அவ்வளவு குண்டுகளையும் தாங்கி உயிரை இழந்த நீரஜா என்ற விமானப்பெண் பற்றி ஒரு சினிமா படம் தயாரிக்கப்பட இருக்கிறது என்ற அறிவிப்பு வந்தவுடன், யார் அந்த நீரஜா? என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்தது. இதுபோன்ற வீரமிக்க சாதனையாளர்கள் வரலாறு எல்லாம் இந்த பாடப்புத்தகத்தில் சேரும் என்கிறபோது, ‘தியாகங்கள் இந்தியாவில் மறக்கப்படுவதில்லை’ என்ற நிலையில், நிச்சயமாக இந்த முடிவு வரவேற்புக்குரியதே.

No comments:

Post a comment