Labels

rp

Blogging Tips 2017

வாக்காளர் பட்டியல்: இன்று சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியல்: இன்று சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியலில் திருத்தம், ஆதார் எண் இணைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் காலை 10 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெறும். தமிழகத்தில் தேர்தலின் போது வாக்காளர்கள் எந்தெந்த வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்தார்களோ, அந்த வாக்குச் சாவடிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாமின் போது பல்வேறு பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், புதிதாக வாக்காளர் அடையாள அட்டை பெறுவது ஆகியவற்றுக்கு வாக்காளர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தை தேர்தல் ஆணையம்
அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருந்தால், அவர்களது ஆதார் விவரங்களும் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படும். இதற்கான தனி மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளைக் கொண்ட கணினியுடன் வாக்குச் சாவடி அதிகாரிகள் சிறப்பு முகாமின் போது பணிகளை மேற்கொள்வர். ஆதார் இணைப்பு மட்டுமல்லாது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா, தகவல்கள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்ற விவரங்களையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a comment