Labels

rp

Blogging Tips 2017

18/05/2015 மாலை தொடக்கக்கல்வி இயக்குனருடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ( பொறுப்பு) பொதுசெயலர் திரு.செல்வராஜ் சந்தித்து ஆசிரியர்கள் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி மனு


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பு பொதுசெயலர் திரு. செல்வராஜ் அவர்கள் சேல்ம் மற்றும் நாமக்கல் மாவட்ட ,வட்டார இயக்கப்பொறுப்பாளர்களுடன் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை நேற்று (18/05/2015 மாலை 5.00 மணியளவில் சந்தித்தார்
அப்போது
1.சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பளையம் வட்டாரத்தில் மலைசுழற்சி முறை சரியாக நடைமுறைப்படுத்தாமை குறித்து இயக்குனர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

அதற்கு இயக்குனர் சேலம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரை உடன் தொடர்பு கொண்டு ஆவண செய்வதாக கூறினார்
2. 750 தனி ஊதியம் 2006 ஜனவரி முதல் 2009 மே முடிய தேர்வுநிலை பெற்றவர்களுக்கு சில இடங்களில் வழங்க மறுப்பதையும்,
மேலும் சில இடங்களில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக  இடைநிலை ஆசிரியர்கள்பதவி உயர்வு பெறும்போது 750 சேர்க்காமல் புதிய பதவியில் ஊதிய நிர்ணயம் செய்யப்படுவதையும் இயக்குனர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது,
அதற்கு அவர் இயக்குனரகத்தால்  விரைவில் பொதுவான தெளிவுரை வெளியிடப்படும் என உறுதி அளித்தார்
3. குறுவள பயிற்சி நாட்களுக்கு ஈடுசெய் விடுப்பு அனுமதித்தல் அரசாணைக்கு அனைத்து உதவிதொடக்கக்கல்வி அலுவலர்களும் ஒரே மாதிரியான வழிமுறைகளை பின்பற்றும் விதமான  வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடவேண்டும் என –தொடக்ககல்வி இயக்குனரைக்கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதற்குஇயக்குனர் அவர்கள் இணை இயக்குனர்(நிர்வாகம்) அவர்களுடன் கலந்துபேசி விரைவில் வெளியிடுவதாக உறுதி அளித்தார்
 4 உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளுக்கு இணையாக தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கும் ஏப்ரல் மாத கடைசி வேலை நாளை  கணக்கிட்டுகோடை விடுமுறை அளிக்கும் வகையில்  உரிய முறையில் பள்ளி நாட்காட்டி-2015-2016 (SCHOOL CALENDER / LEAVE LIST) வெளியிட இயக்குனரை கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதற்கு இயக்குனர் அவர்கள் பள்ளிக்கல்வி இயக்குனர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்

5.ஆசிரியர் இடமாறுதல்மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வினை மே மாதத்திலேயே ,பள்ளி தொடங்கும் முன்னரே நடத்தி முடிக்க வேண்டும் என இயக்குனர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதற்கு தொடக்கக்கல்வி இயக்குனர் இது குறித்து அரசிடம் இருந்து தகவல் ஏதும் இதுவரை பெறப்படவில்லை என்றும் பெறப்பட்டவுடன் தகவல் அனைத்து ஊடகங்கள் வாயிலாகவே வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்

6.மேலும் பொதுக்குழு தீர்மானங்கள் மீது ஆலோசனை செய்து உரிய நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையோடு தீர்மான நகல் நடவடிக்கை வேண்டிய மனுவோடு அளிக்கப்பட்டது.ஆவன செய்வதாக கூறி பெற்றுக்கொண்டார். இயக்குனருக்கு நன்றி தெரிவித்துவிடைபெற்றனர்.இயக்கப்பொறுப்பாளர்கள்

No comments:

Post a comment