Labels

rp

Blogging Tips 2017

மாநிலத்தை 'உரித்து'க் காட்டிய கணக்கு தணிக்கை அறிக்கை: கல்வித்துறைக்கு இழப்பு ரூ. 3.88 கோடி

'நபார்டு' திட்டத்தில் செயல்படும், 687 அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பெஞ்ச், மேஜை ஆகியவை வாங்க,
'டான்சி' மற்றும் தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தில், 'டெண்டர்' கோரப்பட்டது. கதர் மற்றும் கிராமத் தொழில் நிறுவனம் குறைந்த தொகையை குறிப்பிட்டிருந்த போதும், 'டான்சி' நிறுவனத்துக்கே, 33.34 கோடி ரூபாய்க்கு, 90 சதவீத கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது. கதர் வாரியத்துக்கு, 3.75 கோடி ரூபாய்க்கு, 10 சதவீத கொள்முதல் ஆணை மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது
. இந்த விலை நிர்ணயம் மற்றும் கொள்முதல் தொடர்பாக, தமிழக அரசுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் தரப்பில், பல முறை விளக்கம் அளித்த பிறகும், அதிக விலை குறிப்பிட்டிருந்த,'டான்சிக்கு' அதிக கொள்முதல் ஆணை வழங்க அரசு உத்தரவிட்டு இருக்கிறது. இதனால், 3.88 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

கட்டாய கல்வி சட்டத்தில் குளறுபடி: இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த, பஞ்சாயத்து, மாநகராட்சி போன்ற அமைப்புகள் மூலம், உள்ளூர் அதிகார அமைப்பு உருவாக்கி கண்காணிக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு இதை செய்யவில்லை.கட்டாயக் கல்வி சட்டத்தின் நடைமுறைகளை உள்ளூர் அதிகார அமைப்பு மூலம் மேற்கொண்டு, மத்திய அரசிடம் நிதி பெற, பள்ளிக் கல்வி இயக்குனர் அறிக்கை அளிக்க வேண்டும். ஆனால், பள்ளிக் கல்வி இயக்குனரிடம், மெட்ரிக் பள்ளி இயக்குனர் ஆலோசனை அறிக்கை கேட்டும் அவர் அறிக்கை தரவில்லை. நான்கு மாவட்டங்களில், 1,004 நர்சரி பள்ளிகளில் ஆய்வு செய்ததில், 467 பள்ளிகள் இந்தச் சட்டத்தை அமல்படுத்தவில்லை. மேலும், 537 பள்ளிகளில் பல குறைகள் இருக்கின்றன. தமிழகம் முழுவதும், 862 மெட்ரிக் பள்ளிகளில் ஆய்வு நடத்தியதில், 334 பள்ளிகள் சட்டத்தை அமல்படுத்தவில்லை. மேலும், 801 பள்ளிகளில் ஏழை மாணவர் ஒருவருக்குக் கூட, கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் இடம் வழங்கவில்லை. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பள்ளிகளிலும் பல குளறுபடிகள் இருக்கின்றன. தகுதியை உறுதி செய்யாமல், நலிந்த பிரிவினர் மட்டுமின்றி,மற்றவர்களுக்கும் இடம் தரப்பட்டுள்ளது. கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் சேர்ந்தவர்களிடம் கூட, கட்டணம் வசூலித்து இருக்கின்றனர். இலவச சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கவில்லை. சட்டத்தை அமல்படுத்திய பள்ளிகளுக்கு முறையாக நிதி அளிக்கவில்லை.

No comments:

Post a comment