Labels

rp

Blogging Tips 2017

ஓய்வு நாளில் 7 பேர் 'சஸ்பெண்ட்' வணிகவரி ஊழியர்கள் அதிர்ச்சி...!!

பணி ஓய்வு நாளில், ஏழு பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டது, வணிக வரித்துறை ஊழியர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, வணிக வரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கண்டனம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக, வணிக வரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு விடுத்துள்ள அறிக்கை:

தமிழக அரசின் வேறு எந்த துறையிலும் இல்லாத அளவுக்கு, வணிக வரித்துறையில், 35 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து ஓய்வு பெறும் அலுவலர்களை, பணி ஓய்வு நாளன்று, மண்டல கணக்காயர், தணிக்கை குறிப்பு மற்றும் உள்ளீட்டு தணிக்கை குறிப்பு நிலுவை குறிப்புகளை காரணம் காட்டி, உரிய கால அவகாசம் அளிக்காமல், தற்காலிக பணி நீக்கம் செய்யும் தவறான நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.


பணி ஓய்வு நாளன்று பணி நீக்கம் செய்வது, அரசு பிறப்பித்த அரசாணைகளுக்கு முரணாகவும், பல உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராகவும் உள்ளது.

எனவே, இனி வருங்காலங்களில் சட்டத்திற்கும், விதிகளுக்கும் புறம்பாக, தணிக்கை குறிப்புகளின் மீது கேட்கப்படும் சான்றை முற்றிலுமாக விலக்கி, ஓய்வு பெற உள்ள வணிக வரித்துறை அலுவலர்களுக்கு, பணி ஓய்வு வழங்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை வணிக வரி அலுவலக வளாகத்தில், நேற்று ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

No comments:

Post a comment