Labels

rp

Blogging Tips 2017

பிரதமருக்கு விடுமுறையே கிடையாது: மத்திய அரசு தகவல்

.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு, 'பிரதமர் எப்போதும் பணியில்தான் இருப்பார். அவருக்கு விடுமுறையே கிடையாது' என மத்திய அரசு பதிலளித்துள்ளது. 
  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிரதமரின் விடுமுறைக்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் என்னென்ன என கோரப்பட்டது. மேலும் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், அடல் பிஹாரி வாஜ்பாய், தேவகவுடா, ஐ.கே. குஜ்ரால், பி.வி. நரசிம்மராவ், சந்திரசேகர், வி.பி. சிங், ராஜீவ் காந்தி ஆகியோர் எடுத்த விடுப்புகளின் விவரம் குறித்தும் கேட்கப்பட்டது. இதற்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது. 
  ''பிரதமர் எப்போதும் பணியில்தான் இருப்பார். முன்னாள் பிரதமர்கள் எடுத்த விடுப்பு குறித்த ஆவணம் இந்த அலுவலகத்தால் பராமரிக்கப்படவில்லை. தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு அவர் விடுப்பு ஏதும் எடுக்கவில்லை'' என பதிலளிக்கப்பட்டுள்ளது. 
  இதேபோன்று, மற்றொரு மனுவில், முன்னாள் பிரதமர்களின் விடுப்பு தொடர்பாக அமைச்சரவைச் செயலர் போன்ற மற்ற அதிகாரிகளிடம் தகவல் ஏதும் உள்ளதா என கேட்கப்பட்டிருந்தது. இம்மனுவை உள் துறை அமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தது. 
  பிரதமர் அலுவலகம் அனுப்பிய பதிலில், அதுதொடர்பாக ஆவணங்கள் ஏதும் பராமரிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/india/பிரதமருக்கு-விடுமுறையே-கிடையாது-மத்திய-அரசு-தகவல்/article9208340.ece 

via http://j.mp/tamil_news

No comments:

Post a comment