Labels

rp

Blogging Tips 2017

"கல்வித்துறை அதிகாரிகள் உடந்தையா? தமிழக அரசின் இலவச பாட புத்தகங்கள் வேஸ்ட் பேப்பர் கடையில் விற்க முயற்சி - 8 பேர் கைது !!

திருவள்ளூர் - தமிழக அரசின் இலவச பாட புத்தகங்களை வேஸ்ட் பேப்பர் கடையில் விற்க முயன்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த வெள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், சிலர் லாரி ஒன்றில் புத்தக பண்டல்களை ஏற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக ரோந்து சென்ற வெங்கல் போலீசார், சந்தேகத்தின்பேரில்


பள்ளிக்குள் சென்று விசாரணை செய்தனர். போலீசாரை கண்டதும் பள்ளி ஊழியர்கள் தப்பி ஓடிவிட்டனர். லாரியில் பாட புத்தகங்களை ஏற்றிக்கொண்டு இருந்த 8 பேரையும் பிடித்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அவர்கள் கிளாம்பாக்கம் ஜெயபால் (50), சென்னை தண்டையார்பேட்டை முஸ்தபா (45), நாகப்பன் (41), பாலமுருகன் (31), சென்னை கொருக்குப்பேட்டை சீனு (29), ரகு (30), ஆனந்தன் (45), எட்டியப்பன் (50) என்பதும் தமிழக அரசின் இலவச பாட புத்தகங்களை வேஸ்ட் பேப்பர் கடைக்கு வாங்கி சென்றதும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் புஷ்பராணி கொடுத்த புகாரின்பேரில், வெங்கல் போலீசார் வழக்கு பதிந்து, 8 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாரியுடன் 2 டன் எடை கொண்ட பாட புத்தகங்களையும் பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில், இலவச பாட புத்தகங்களை விற்ற கல்வித்துறை ஊழியர்களை போலீசார் தேடி வருகின்றனர். இலவசபாட புத்தகங்களை, வேஸ்ட் பேப்பர் கடைக்கு விற்ற சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a comment