தமிழக ஆசிரிய இயக்கங்களில் தோழமை சங்கங்கள் இணைவது என்பது ஒருவர் அல்லது இருவர் இல்லையெனில் ஒரு ஒன்றியத்தில் சில ஆசிரியர்கள் என்ற நிலையை தான் பார்க்கிறோம்.
கரூர் மாவட்டத்தின் ஒரு தோழமை சங்கவாதிகள் தன் இயக்கத்தின் மாநில போக்கில் வெறுப்புற்று ஒரு மாற்று இயக்கத்தை கண்டுபிடிக்க அவர்களுக்குள் ஒரு குழு அமைத்து , சில வினாக்கள் அமைத்து அவர்களின் எதிர்பார்ப்பையையும் , பாதுகாப்பிற்கும் ஏற்ற கூட்டணியை தேடி இருக்கிறார்கள். அதில் ஆக சிறந்த கூட்டணியாக அவர்கள் கண்டு அறிந்தது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
ஒருவர் , இருவர் இல்லை ஓராயிரம் பேருடன் ஒரு மாவட்டமே அதன் அத்தனை ஒன்றியங்களுடன் அற்புதமான நிகழ்வோடு கரூர் மாநகரில் ஒரு இனிய பொழுதில் அவர்கள் தங்களை ஆசிரிய இயக்கங்களின் நதிமூலமான திரு. செ.மு. அய்யாவிடம் தங்களை ஓப்படைத்தனர் . இது தமிழக ஆசிரிய இயக்கங்களின் வரலாற்றில் நடக்காத நிகழ்வு என்பதை பொருமையோடு பதிவு செய்கிறோம்.
No comments:
Post a comment