Labels

rp

Blogging Tips 2017

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஊதிய குறை தீர்க்கும் கமிட்டி முன்பு சாட்சியம் அளிப்பு

  26.02.2020 அன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஊதிய குறை தீர்க்கும் கமிட்டி முன்பு நமது மாநில தலைவர் அய்யா செ.மு அவர்கள் தலைமையில் மாநில பொருளாளர் திரு.ரக்‌ஷித் மாநில பொதுச்செயலாளர் (பொ) திரு பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைத்தனர் குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் 4200 கிரேட் பே தர மறுத்தததின் காரணமாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை விளக்கி கூறினர்.  2009 க்குப் பின் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அவர்களுடைய பிரச்சினைகளை மிகத்தெளிவாக ஊதியக்குழு குறைதீர் கமிட்டி முன்பு எடுத்துரைத்தனர் .
2009 க்குப் பின் நியமிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய முரண்பாடுகள் குறித்து மிகத் தெளிவாக எடுத்து கூறினர். கமிட்டியின்  உறுப்பினர் திரு தேவராஜன் இ.ஆ.ப அவர்களும் திருபணிந்ந்திர ரெட்டி, இ.ஆ.ப மற்றும் திரு ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப இதுவரையில் அவர்களும் மிகத் தெளிவாக கேட்டு இப்பிரச்சினைகள் குறித்து இவர்கள் கூறும் கருத்துக்கள் இதுவரை யாரும் கூறாத கருத்துகள் எனவே தற்போது இதுகுறித்து விளக்கம் தாருங்கள் என  நிதித்துறை கூடுதல் செயலாளர் திரு ஸ்ரீதர் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மீட்போம் என்ற நம்பிக்கையுடன் மாநில பொருளாளர் கே.பி.ரக்க்ஷித்

            2009 க்கு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர் பிரச்சினையை   எடுத்துக்கூறும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த நம்  மாநில தலைவர் ஐயா செ.மு அவர்களுக்கு இந்த நேரத்தில் என் நன்றியை நாம் தெரிவித்துக் கொள்வோம் என்றும்  அவர் வழியில்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

 உடன்  பங்கேற்ற மாநில துணைப் பொதுசெயலாளர்கள் திரு.பொன் நாகேஷ் மற்றும்  திரு.சாந்த குமார் அவர்களுக்கும் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் திருகோ நாகராஜன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

No comments:

Post a Comment