Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டது ஏன் ?
20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டது ஏன் என்பதற்கு, 2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
சட்டசபையில் நேற்று தி.மு.க. உறுப்பினரும், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி (திருக்கோவிலூர் தொகுதி), கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து பேசினார். ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை அரசு மூட இருப்பது தொடர்பாக அவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில்ஆசிரியர்களின் வருகைப்பதிவு செல்போன் செயலி மூலம் பதிவேற்றும் நடைமுறை 2ம் தேதி முதல் வருகிறது
திருவண்ணாமலை மாவட்டத்தில், செல்போன் செயலி மூலம் 12 ஆயிரம் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் நடைமுறை வரும்2ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில்,கல்வித் தேர்ச்சி சதவீதத்தையும், மாணவர்களின் கற்றல் அடைவுத்திறனையும் அதிகரிப்பதற்கான பல்வேறு சிறப்பு முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், மாணவர்களின் இடைநிற்றல் தடுத்தல், விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருதல், தாமதம் தவிர்த்தல் போன்றவற்றில் தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சத்துணவில் பாக்கெட் மசாலாவுக்கு தடை : வீட்டு முறை சமையலுக்கு மாற உத்தரவு
தமிழகத்தில் அரசு பள்ளி சத்துணவு மையங்களில்,பாக்கெட் மசாலா பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரைண்டர், மிக்சி வழங்கப்பட்டுள்ளதால் வீட்டு முறை சமையலுக்கு மாற உத்தரவிடப்பட்டுள்ளது
.தமிழக சத்துணவு திட்டத்தில், அரசு பள்ளிகளில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. சாம்பார் சாதம், கீரை சாதம், எழுமிச்சை சாதம், வெஜிடபிள் பிரியாணி உள்ளிட்ட, 11 வகையான கலவை சாதம், ஐந்து வகையான மசாலா முட்டை, வறுத்த உருளைக்கிழங்கு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது
பசுமை உறுதிமொழி ஜீலை 2 முதல் அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும்.
ஜூலை, 1ல் துவங்கி, 10 நாட்கள் நடைபெறுகிறது.தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், அரசு ஒதுக்கீட்டில், 3,328; நிர்வாக ஒதுக்கீட்டில், 516 இடங்கள் உள்ளன. பல் மருத்துவமான, பி.டி.எஸ்.,சில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,198; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 715 இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள, 5,757 இடங்களுக்கு, 47 ஆயிரத்து, 347 பேர் விண்ணப்பித்தனர்.இவர்களுக்கான தர வரிசை பட்டியலை, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் வெளியிட்டார். இதை, துறை செயலர் ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். அரசு மற்றும் நிர்வாக இடங்களுக்கு, தனித்தனியாக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.அரசு இடங்களுக்கு,
🍑 *பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க புதிய ஆன்ராய்டு ஆப் வெளியிடப்பட்டுள்ளது.*
🌷இது போல் ஆசிரியர்களின் செயல் திறனை மதிப்பிட மேலும் பல உத்திகள் கையாளப்படும் என தெரிகிறது.
*online notes Of Lesson :*
🌷மாணவர்களுக்கு திறம் பட கற்பிக்க திட்டமிடல் அவசியம்
🌷.ஆகையால் பாடக்குறிப்பேடு எழுதுகின்றனர். பாடக்குறிப்பேடு முறையாக எழுதப்படுவதை கண்காணிக்க ஆசிரியர்கள் Mobile app மூலம் பிரதி வாரம் Scan செய்து Upload செய்ய வேண்டும்.
🌷இவை கல்வித்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும்.
*Digital Work done Register :*
🌷ஆசிரியர்கள் அன்றாடம் கற்பிக்கும் பாடம் ,பயன்படுத்திய துணை கருவிகள் ஆகிய விபரங்கள் பதியப்பட்டிருக்கும். இதுவும் online முறையில் மாற்றப்படும்.
*online Mark register :*
🌷மாதத் தேர்வுகள் , பருவத் தேர்வுகள், ஆகியவற்றில்
மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் உடனுக்குடன் onlineல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
🌷இவை அனைத்தையும் மேற்கொள்ள புதிய Android app விரைவில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.
*மாற்றங்களுக்கு தயாராவோம்.*
*online notes Of Lesson :*
🌷மாணவர்களுக்கு திறம் பட கற்பிக்க திட்டமிடல் அவசியம்
🌷.ஆகையால் பாடக்குறிப்பேடு எழுதுகின்றனர். பாடக்குறிப்பேடு முறையாக எழுதப்படுவதை கண்காணிக்க ஆசிரியர்கள் Mobile app மூலம் பிரதி வாரம் Scan செய்து Upload செய்ய வேண்டும்.
🌷இவை கல்வித்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும்.
*Digital Work done Register :*
🌷ஆசிரியர்கள் அன்றாடம் கற்பிக்கும் பாடம் ,பயன்படுத்திய துணை கருவிகள் ஆகிய விபரங்கள் பதியப்பட்டிருக்கும். இதுவும் online முறையில் மாற்றப்படும்.
*online Mark register :*
🌷மாதத் தேர்வுகள் , பருவத் தேர்வுகள், ஆகியவற்றில்
மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் உடனுக்குடன் onlineல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
🌷இவை அனைத்தையும் மேற்கொள்ள புதிய Android app விரைவில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.
*மாற்றங்களுக்கு தயாராவோம்.*
பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
பள்ளிகளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
.உலக சுற்றுச்சூழல் தினமான கடந்த 5ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில் 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மற்றும் தயாரிப்பிற்கு தடை விதிக்கப்படுகிறது. பால் பாக்கெட், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம்.
பிளாஸ்டிக் பை, பாட்டில்கள் தயாரிப்பு விற்பனைக்கு தடை விதிக்கப்படும்.
மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிப்பதாக பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாகவும், பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படும் போது வெளிப்படும் நச்சுக் காற்றால் சுவாசிப்பதில் பிரச்னை ஏற்படுவதோடு, பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் கால்நடைகளும் பாதிக்கப்படுகிறது.
இதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் தமிழகத்தில் பள்ளிகளில் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து ஆர்.எம்.எஸ்.ஏ(அனைவருக்கும் கல்வி இயக்கம்) திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், திட்ட அலுவலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ‘தமிழக முதல்வரின் உத்தரவுப்படி பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி வீசியெறிப்படுகின்ற பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளிகளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி வீசப்படுகின்ற பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார்.
பள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த செங்கோட்டையன் ஒரு வாரம் கெடு
அனைத்து பள்ளிகளின் கழிப்பறைகளையும், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், துாய்மைப்படுத்தி, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில், அமைச்சர், செங்கோட்டையன், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். நிர்வாக சீர்திருத்தம், பள்ளிகளை தரம் உயர்த்துவது, ஆசிரியர்களின் பணி நிர்வாகத்தை சீரமைப்பது, கல்வி தரத்தை உயர்த்துவது என, பல்வேறு திட்டங்கள் அமலுக்கு வந்து உள்ளன.தற்போது, பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அவற்றில் சிறப்பு கவனம் செலுத்த, அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனர்களுக்கு, அமைச்சர், செங்கோட்டை யன், கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.கடித விபரம்:தமிழகத்தில் உள்ள, நர்சரி, பிரைமரி பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், வளாகத்தின் துாய்மையை மேம்படுத்த வேண்டும்.
பள்ளி வளாகத்தில் குப்பை, கூளங்களை அகற்றி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு, குடிநீர் மற்றும் பயன்பாட்டுக்கான நீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.பள்ளி வளாகத்திலுள்ள, இரு பாலின கழிப்பறைகளையும் முழுமையாக துாய்மைப்படுத்தி, மாணவர்கள் தயக்கமின்றி பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கையை, ஒரு வாரத்தில் முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஒரே ஒரு செட் சீருடை வழங்கல் அரசு பள்ளி மாணவர்கள் சோகம்
ஒரே ஒரு செட் சீருடை மட்டுமே வழங்கியிருப்பதால், அரசு பள்ளி மாணவ, மாணவியர், கடந்த ஆண்டு சீருடைகளை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள், செருப்பு, நான்கு செட் சீருடை, கலர் பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ், ஸ்கூல் பேக் உட்பட, 14 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்தாண்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் ஒன்பதில் இருந்து பிளஸ் 2 வரை சீருடைகள் மாற்றப்பட்டுள்ளன. புதிய சீருடை என்பதால், துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு ஒரு செட் சீருடை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரே அளவுள்ள சீருடை வழங்கப்பட்டு உள்ளது. மூன்று, நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு மிகவும் இறுக்கமாகவும், முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பெரிதாகவும் உள்ளது. அளவுக்கு ஏற்ப சீருடை வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும். ஒரே ஒரு செட் மட்டும் வழங்கியிருப்பதால், கடந்தாண்டு சீருடையையும் அணிந்து வர, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
9ம் வகுப்பு பாடத்திட்டத்தில் கி.மு, கி.பி நீக்கம் - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
பாடப்புத்தகத்தில் கிறிஸ்துவர்கள் புறக்கணிப்பு என்று புகாரும் இதுவரை வரவில்லை என்று, 9ம் வகுப்பு புத்தகத்தில் கிமு-கிபி நீக்கம் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் பாண்டியராஜன் பதிலளித்தார்.
மேலும், பாட திட்டத்தில் குறைகள் இருந்தால் குழு மூலம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும், பாட திட்டத்தில் குறைகள் இருந்தால் குழு மூலம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த திட்டம் : சி.இ.ஓ.,க்களை கண்காணிக்க இணை இயக்குனர்கள்
பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த கட்டமாக, மாவட்ட வாரியாக, இணை இயக்குனர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முதன்மை கல்வி அதிகாரிகளை கண்காணிக்கும்
பணியில், இணை இயக்குனர்கள் ஈடுபடுவர்.தமிழக பள்ளிக்கல்வியில், 40 ஆண்டுகளுக்கு பின், மேற்கொள்ளப்படும் நிர்வாக சீர்திருத்தம், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக, தொடக்க கல்வி மற்றும் மெட்ரிக் இயக்குனரகத்தின் மாவட்ட அலுவலகங்கள் மூடப்பட்டன.அந்த நிர்வாகத்தில் இருந்த பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்குனரத்தின் மாவட்ட அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வந்தன. அதிகாரம்மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.க்கள், கூடுதல் அதிகாரம் மிக்கவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். பணி நியமனம், பணி மாறுதலுக்கான அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.அடுத்த சீர்திருத்தமாக, சென்னையில், தலைமையகத்தில் பணியாற்றும் இணை இயக்குனர் பதவிகள், மண்டல இணை இயக்குனர் பதவியாக மாற்றப்பட உள்ளது. இதன் படி, பள்ளிக்கல்வி தலைமையகத்தில், சில இயக்குனர்கள் மட்டும் பணியில் இருப்பர்; மற்ற இணை இயக்குனர்கள், மண்டல வாரியாக, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி, விழுப்புரம், வேலுார், தஞ்சாவூர், நாமக்கல் என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட உள்ளன. இவற்றில், ஒவ்வொரு மண்டல தலைமையகத்திலும், அருகில் உள்ள மாவட்டங்கள் இணைக்கப்படும்.அந்த மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகள், நேரடியாக, இணை இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும். அரசாணைஇணை இயக்குனர்களுக்கு உதவியாக, துணை இயக்குனர்களும், மண்டல அலுவலகத்தில் நிர்வாக பணிகளை மேற்கொள்வர்.
இதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சட்ட ஆய்வு நடத்தி, அமைச்சர் மற்றும் செயலரின் மேற்பார்வையில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. விரைவில், அரசாணை வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து மாணவா்களுக்கும் எமிஸ் பதிவு கட்டாயம்
அரக்கோணம்: கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் அனைத்து மாணவா்களுக்கும் பதிவு கட்டாயம் இருக்க வேண்டும் என அரக்கோணத்தில் செய்தியாளா்களிடையே அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலா் குணசேகரன் தெரிவித்தார்.
சிஎஸ்ஐ சென்னை பேராயத்தின் சிஎஸ்ஐ மருத்துவமனையினா் மற்றும் அரக்கோணம் சிஎஸ்ஐ சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளியினா் இணைந்து ஐந்து நாட்கள் மாணவ மாணவியருக்கான மருத்துவ முகாமை சிஎஸ்ஐ சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளியில் நடத்துகின்றனா். இம்முகாமை அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலா் குணசேகரன் செவ்வாய்கிழமை துவக்கி வைத்தார்.
புதிய பாடப்புத்தகங்கள்... ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி!
நடப்புக் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடப்புத்தகங்களை நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு மாநில அளவில் பயிற்சி அளிக்கப்படுகிறது.*
*மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் இப்பயிற்சி சென்னையில் இன்று தொடங்கியது.*
*ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, 11-ம் வகுப்பு ஆகியவற்றுக்கு இந்த ஆண்டில் பாடப்புத்தகங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.*
*இதுவரை இல்லாத அளவுக்கு பாடங்களின் அளவும் தன்மையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வழக்கமான பாடப்புத்தக மாற்றத்தைப்போல அல்லாமல், இந்த முறை சற்று கனமாக உள்ளதால், புதிய உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்வதில் ஆசிரியர்களுக்கே சிரமமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.*
*இதனால்விரிவாக்கப்படும் புத்தகங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் பயிற்சி அளிக்க கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.*
*இதில், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒவ்வொரு பாடத்துக்கும் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.*
*இப்பயிற்சியை முடித்தவர்கள் அவரவர் மாவட்டத்துக்குச் சென்று மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மற்ற ஆசிரியர்களுக்கு இதே பயிற்சியை வழங்குவார்கள்.*
*அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர்களும் பங்கேற்கும்வகையில் பின்னர் வட்டார அளவிலும் பயிற்சி விரிவாக்கப்படும்*
*மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் இப்பயிற்சி சென்னையில் இன்று தொடங்கியது.*
*ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, 11-ம் வகுப்பு ஆகியவற்றுக்கு இந்த ஆண்டில் பாடப்புத்தகங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.*
*இதுவரை இல்லாத அளவுக்கு பாடங்களின் அளவும் தன்மையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வழக்கமான பாடப்புத்தக மாற்றத்தைப்போல அல்லாமல், இந்த முறை சற்று கனமாக உள்ளதால், புதிய உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்வதில் ஆசிரியர்களுக்கே சிரமமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.*
*இதனால்விரிவாக்கப்படும் புத்தகங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் பயிற்சி அளிக்க கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.*
*இதில், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒவ்வொரு பாடத்துக்கும் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.*
*இப்பயிற்சியை முடித்தவர்கள் அவரவர் மாவட்டத்துக்குச் சென்று மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மற்ற ஆசிரியர்களுக்கு இதே பயிற்சியை வழங்குவார்கள்.*
*அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர்களும் பங்கேற்கும்வகையில் பின்னர் வட்டார அளவிலும் பயிற்சி விரிவாக்கப்படும்*
'பயோமெட்ரிக்' கொண்டு வருவதில் சிக்கல் - பதிலாக Mobile App Attendance கொண்டு வர அரசு திட்டம்!
பள்ளிகளில் 'பயோமெட்ரிக்' முறையை கொண்டு வருவதில் பல சிக்கல்கள் உள்ளன. இதனால் ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க 'சி.இ.ஓ., போர்டல்' என்ற புதிய அலைபேசி செயலியை கல்வித்துறை கொண்டு வருகிறது.
பள்ளி அமைவிடம் குறித்த அட்ச, தீர்க்க ரேகை விபரங்களும் இருக்கும். அந்த செயலியை ஆசிரியர்கள் 'ஸ்மார்ட் போனில்' பதிவிறக்கம் செய்து பள்ளிக்குள் செல்லும்போதும், வெளியேறும்போதும் விரல்ரேகையை பதிய வேண்டும்.
அட்ச, தீர்க்க ரேகையில் அதிகபட்சம் 100 மீ., வரை வேறுபாடு இருந்தால் மட்டும் ஏற்கும். ரேகை பதியாவிட்டால், விடுப்பு விபரங்களை பதிய வேண்டும்.அதேபோல் மாணவர் வருகைப் பதிவுக்கு 'டி.என்., அட்டனென்ஸ்' என்ற செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் அவரவர் அலைபேசி மூலம் மாணவர்கள் வருகைப்பதிவையும் மேற்கொள்ள வேண்டும். விடுப்பு எடுக்கும் நாட்களில், அவரது வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவை பிற ஆசிரியர்கள் பதியலாம். ஆசிரியர்கள் தங்களது அலைபேசி மூலம் பதிந்தால் மட்டுமே, பணிக்கு வந்ததாக கருதப்படும்.
மேலும் பாடப்புத்தகத்தில் 'கியூ.ஆர்., கோடை' 'ஸ்கேன்' செய்து பாடம் எடுக்க வேண்டும். இதன்மூலம் அவர் எந்தந்த பாடங்களை அன்றைய தினம் கற்பித்தார் என்பதை கண்காணிக்கலாம். அவர் 'கியூ.ஆர்., கோடை' 'ஸ்கேன்' செய்யவில்லை எனில் பாடம் எடுக்கவில்லை என, கருதப்படும்.
தரவுகள் அனைத்தும் அதிகாரிகள் பார்வைக்கு செல்வதால் ஆசிரியர்கள் வருகை பதிவு, பாடம் நடத்தியது போன்ற விபரங்களை உடனுக்குடன் அறியலாம்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'ஏற்கனேவே 'எமிஸ்,' 'டீச்சர் புரைபைலில்' சேகரிக்கப்பட்ட மாணவர், ஆசிரியர்கள் விபரங்கள் உள்ளன. மேலும் ஆசிரியர்களின் அலைபேசி எண் விபரம் சேகரிக்கப்பட உள்ளன. இதன்மூலம் முறையாக பணிக்கு செல்லாத ஆசிரியர்கள் சிக்குவர்,' என்றார்.
அடுத்தது என்ன கல்வித்துறையில்? ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி பாடம் நடத்தாமல் இருக்க முடியாது? இனி என்ன என்ன மாற்றங்கள் வர இருக்கிறது.—ஓர் எச்சரிக்கை மற்றும் முன் தயாரிப்பு செய்துகொள்ள ஆலோசனை கட்டுரை
- · ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியாக வருவது இல்லை.
- · வந்தாலும் பாடம் நடத்துவது இல்லை.
- · பள்ளிக்கு லேட்டாக வந்து முடியும் முன்னரே சென்று விடுகின்றனர்.
- · ஈராசிரியர் பள்ளியில் முறை வைத்து பள்ளிக்கு விடுப்பு எடுத்துக்கொள்கின்றனர்.
- · தலைமை ஆசிரியர்கள் அந்த வேலை,இந்த வேலை என ஆன் டியூட்டி போட்டுவிட்டு சொந்தவேலை செய்கின்றனர்.
இவைபோன்று
பல புகார்கள் கல்வித்துறைக்கு வந்ததை அடுத்து கல்வித்துறை பல நடவடிக்கைகள் எடுத்து
இவற்றிற்கெல்லாம் நவீன ஸ்மார்ட் போன் உதவியுடன் முடிவு கட்ட
தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
EMIS
தற்போது
பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் EMIS என்னும் தொகுப்பில்
சேகரிக்கப்பட்டு வருகிறது.தற்போது EMIS வலைதளம் மிக வேகமாக செயல்பாட்டில் உள்ளதை கவனித்தீர்களா.ஏன்
தெரியுமா ? EMIS சர்வர் தற்போது CLOUD என்னும் அதிவேக சர்வருடன் இணைக்கப்பட்டு விட்டது
.இனி EMIS வலைதளம் எப்போதுமே அதிவேகத்திலேயே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த
நடவடிக்கை
EMIS
சர்வர் தற்போது CLOUD என்னும் அதிவேக சர்வருடன் இணைக்கப்பட்டதன் மூலம் இனி அதனைப்பயன்படுத்து
பல ஆன்ட்ராய்டு ஆப்ஸ்கள் உருவாக்கலாம்.அதற்குண்டான தரவுகள் அனைத்தும் இனிமெயின் சர்வருடன்
பங்கிட்டுக்கொள்ளலாம்.
அதற்கு
உதாரணம் தான் சென்ற ஆண்டு மாணவர்களுக்கான் அடையாள அட்டை ஆப்ஸ் ஆகும்.நாம் அதைப்பயன்படுத்தியே
மாணவர்களின் போட்டோக்களை அப்லோடு செய்தோம் அல்லவா
அதுபோலவே
தற்போது TN ATTENDANCE எனும் ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.இதனைக்கொண்டு மாணவர் வருகைப்பதிவை
நாம் மேற்கொள்ள வேண்டும்
சரி இதனால்
என்ன பயம்.
ஆம் பயமொன்றும்
இல்லை.ஆனால் கட்டுப்பாடுகள் வர இருக்கின்றன
அதாவது.
பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் இதனை பதிவிறக்க வேண்டும். தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு
மட்டும் தான் அவரவர் கைபேசி கொண்டு வருகை பதிவிட
வேண்டும் .விடுப்பு எடுக்கும் ஆசிரியரின் வகுப்பிற்கு மட்டும் நாளிதான் அடுத்த ஆசிரியர் பிற ஆசிரியர் வகுப்பிற்கு வருகை பதிவிட வேண்டும்.
முன்னரே அதாவது ஒவ்வோரு கைபேசி எண்ணும்
அதற்குண்டான ஆசிரியர் பெயருடன் இணைத்து தரவுகள் சேகரிக்கப்படும்.அதனைக்கொண்டு பள்ளிக்கு
வராமலேயே அடுத்த ஆசிரியர் போன் மூலம் யார் யார் வருகை பதிவு மேற்கொண்டனர் என வகைப்படுத்தப்படும்.
இதன் மூலம் அவரவர் வகுப்பிற்கு அவரவரே கைபேசி மூலம் வருகைப்பதிவு செய்தால் தான் ஆசிரியர்
பள்ளிக்கு வந்துள்ளார் என அர்த்தம் இல்லையேல் அவர் வரவில்லை என கணக்கெடுக்கப்படும்.அதாவது
அவரது வருகை போலி என கணக்கிடப்படும். இதன்மூலம் இரு ஆசிரியர் எந்த எந்த வகுப்பிற்கு
அன்றைய தினம் கையாண்டு உள்ளார் என அறியலாம்
QR
கோடுகள் ஸ்கேன் செய்ய பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதியதாக வெளியிடப்படும்
QR கோடு ஸ்கேனர் மூலம் தான் ஆசிரியர்கள் ஸ்கேன்
செய்து பாடம் நடத்தவேண்டும்.
ஆசிரியர்களின் கைபேசி எண்கள் ஏற்கனவே மெயின்
சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் அவர் போதிக்கும் போது பயன்படுத்திய
QR கோடுகள் மூலம் அவர் என்ன என்ன பாடங்கள்
போதித்தார்.என தானகவே பதிவு செய்யப்பட்டு அத்தகவல்மெயின் சர்வருடன் இணைத்து கண்காணிக்கப்படும். அவர் QR கோடு ஸ்கேன் செய்யவில்லை எனில் பாடம் போதிக்க வில்லை
சும்மா இருந்ததாக கணக்கிடப்படுமாம்.பாடம் சம்மந்தப்பட்ட QR கோடுகள் ஸ்கேன் செய்ய அரசு சார்பில் புதியதாக வெளியிடப்படும்
QR கோடு ஸ்கேனர் மூலம் தான் ஸ்கேன் செய்து
பாடம் நடத்தவேண்டும் என அறிவிக்கப்பட உள்ளதாம். < ரக்ஷித்.கே.பி.>
ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவு
ஏற்கனவே
ஆசிரியர் விவரங்கள் TEACHER PROFILE என்ற முறையில் தகவல்கள் திரட்டப்பட்டு தயாராக உள்ளன.இதனை
EMIS,DISE தரவுகளுடன் இணைக்கும் பணி முடுக்கி
விடப்பட்டுள்ளது,ஈரிரு வாரங்களில் இப்பணி முடிவடைந்ததும் ஆசிரியரின் வருகைப்பதிவிற்கு
என தனி ஆண்ட்ராய்டு ஆப் வெளியிடப்பட உள்ளது.< ரக்ஷித்.கே.பி.>
இந்த ஆப்பில் ஆசிரியர் தன் கைரேகையை
காலை 9.00-9.15 க்குள்ளும் பள்ளியை விட்டு
வெளியே செல்லும் போதும் பதிய வேண்டும்.இதில் என்ன வென்றால் பள்ளியின் அமைவிடம் குறித்த
அட்ச ,தீர்க ரேகை விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் கைரேகை பதிவிடும் போது
அவர் இருக்கும் இடத்தின் அட்ச தீர்க ரேகையுடன் பதிவாகும் வகையில் இந்த ஆப் தயாரிக்கப்பட
உள்ளதால் ஏற்கனவே பதுவு செய்யப்பட்ட அமைவிடத்துடன் ஒப்பிட்டு வருகையை உறுதிப்படுத்தும்
வகையில் இது செயல்பட உள்ளதாம்.100 மீட்டர் வேறுபாடு இருப்பின் ஏற்றுக்கொள்ளும் வகையில்
இது நிறுவப்பட்டுள்ளது. மேலும் கரேகை பதியாவிட்டால் விடுப்பு விவரங்கள் பதிவிட வேண்டும்.
அத்தரவுகள் உடனுக்குடன் தொகுத்து உயரதிகாரிகளின் பார்வைக்கு ஆட்டோமேட்க்காக தினமும் காலை மாலை என விவரங்கள்
(இதற்கென தனியாக அதிகாரிகளுக்கென உருவாக்கப்பட்ட தனி ஆப்ஸ்-ல் )தகவல்கள் பரிமாறப்படும்.
ஆசிரியரின் வருகை வாராந்திர ,மாதாந்திர
அறிக்கைகள் பள்ளியின் DISE எண்ணை தெரிவு செய்தால் போதும் கிடைத்துவிடும்.அதேபோல் அவர்
கையாண்ட வகுப்பு, நடத்திய பாடங்கள் என்ன? போன்ற விவரங்களும் கிடைத்துவிடும்.
இனி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆன்ராய்டு
போன் தான் உண்மை விளம்பி. நம்மை கேட்காமலேயே நம் செயல்பாட்டைக்கண் காண்காணிக்க நமது
போன் தான் அதிகாரிகளுக்கு தரவுதரும் கருவியாகிறது. < ரக்ஷித்.கே.பி.>
உண்மையாக
உழைக்கும் ஆசிரியருக்கு பாதிப்பேதும் இல்லை, ஆனால் உழைக்கத்தயங்குவோர் உழைத்திட வேண்டிய
கட்டாயத்திற்கு தள்ளப்படுவர்.
இவை எல்லாம் மாணவர் நலன் நோக்கியே.
வரவேற்போம் மாற்றத்தை
இன்னும்
தகவல்கள் தர உள்ளேன்.
WAIT AND SEE
அன்புடன்
உங்கள் ரக்ஷித்.கே.பி.
1,200 அரசு பள்ளிகளை இணைக்க திட்டம்:தகவல் சேகரிப்பில் கல்வித்துறை தீவிரம்!!!
மாணவர் சேர்க்கை குறைவாகவுள்ள, 1,200 அரசுப் பள்ளிகளை இணைக்க,
தொடக்க கல்வித்துறை தகவல் சேகரித்து வருகிறது
. அத்துடன்,, அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை,, காலியிடங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில், தொடக்க கல்வி இயக்ககத்தில் செயல்படும், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சரிந்து வருகிறது. நடப்பாண்டு, புதிய மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி மாணவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது. அதன் இயக்குனர் கருப்பசாமி உத்தரவுப்படி, 10க்கும் குறைவாகவுள்ள மாணவர்கள், படிக்கும் பள்ளிகள் பட்டியல் திரட்டப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், போதிய கற்பித்தல் பணிகளின்றி சம்பளம் பெறுகின்றனர்.
எந்த கல்விமுறை - குழப்பத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்
இந்த கல்வி ஆண்டில் புதிய கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அது குறித்து தெளிவான பயிற்சியோ, வழிகாட்டுதலோ, குறிப்புகளோ தரப்படவில்லை.
பழைய முறை தொடர்கிறதா, கல்வி இணை செயல்பாடுகள் தொடர்கிறதா, cce பதிவேடுகள் பராமரிப்பதா என்பதைக் குறித்து எந்தவித தெளிவான குறிப்புகளும் இல்லை. மாவட்டத்திற்குடாரத்திற்கு வட்டாரம் ,ஆசிரிய பயிற்றுனர்களுக்கு பயிற்றுனர் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை கூறி பதிவேடுகளை பராமரிக்க சொல்லி ஆசிரியர்களை கட்டாயப்படுத்துகின்றனர் .
புதிய கற்பித்தல் முறையில் பாட குறிப்பு( notes of lesson )எழுதுவதா இல்லையா என்பதை உறுதி செய்யாமல் தாங்கள் அறிந்த கருத்துக்களை சொல்லி வருவது ஆசிரியர்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
வரும் ஜூலை மாதம் பயிற்சி அளிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் தற்போது பார்வைக்கு செல்லும் அதிகாரிகளும், ஆசிரிய பயிற்றுனர்கள் ஒவ்வொரு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். முறையான வகையில் ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்கள் தரப்படும்போது மட்டும்தான் தெளிவான முறையில் கற்பித்தலை தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ள இயலும்.
கடந்த ஆண்டு பரிசோதனை முறையில் புதிய கற்பித்தல் முறை தெரிவு செய்யப்பட்ட ஒரு சில பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது அதில் உள்ள நிறை குறைகளை ஆராய்ந்து ஒரு சில மாற்றங்களுடன் கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்படலாம்.
தெளிவான வழிகாட்டுதல்கள், பயிற்சிகள் தரப்படும் வகையில் சமூக வலைதளமான வாட்ஸ் அப்பில் வந்துள்ளது என கூறி பதிவேடுகளை பராமரிக்க சொல்லி கட்டாயப்படுத்தி வருவது ஆசிரியர்களுக்கு மன உளைச்சலையும், நெருக்கடியையும் அதிகரிக்கச் செய்கிறது.
ஆகவே ஆசிரிய நண்பர்களே தெளிவான பயிற்சிகள் தரப்படும் வரையில் சுய கருத்துக்களை யூகமாக சொல்லி ஆசிரியர்களிடம் குழப்பத்தை உண்டாக்காமல் இருப்பதே ஆசிரியர்களுக்கு நல்லது
பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ம் தேதியோடு நிறைவு!
பான் எண்ணுடன், ஆதார் எண்ணை ஜூன் 30ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இல்லை என்றால் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியாது.
பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. ஜூன் 30ம் தேதிக்குள் மேல் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தால் உங்களது ஐடிஆர் எனப்படும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)