rp

Blogging Tips 2017

அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு இனி கற்பித்தல் பணி இல்லை

'எல்.கே.ஜி., - யு.கே.ஜி., துவங்கப்படும், 2,382 அங்கன்வாடி மையங்களின் ஊழியர்கள் இனி கற்பித்தல் பணியை மேற்கொள்ள தேவையில்லை' என, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

அங்கன்வாடி மையங்களில், ஆறு மாதம் முதல், 3 வயதுடைய குழந்தைகளுக்கு உரையாடுதல் பயிற்சியும், 3 முதல், 6 வயது குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியும் அளிக்கப்பட்டு, சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, 2,382 அங்கன்வாடி மையங்களில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட்டு, பெண் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால், அங்கன்வாடி மைய ஊழியர்களை முப்பருவ கல்வியை கற்பிக்க வேண்டாம் என்றும், அவர்கள் கலவை சாதம், சத்து மாவு வழங்குதல், வளரிளம் பெண்களுக்கான திட்டத்தை செயல்படுத்துதல் போன்ற பணிகளை மட்டும் மேற்கொண்டால் போதும் என, தெரிவிக்கப் பட்டது

.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:எல்.கே.ஜி.,- யு.கே.ஜி., வகுப்புகள், 18ல் துவங்க உள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துவதால் அங்கன்வாடி ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கல்வி கற்பிக்கும் பணி மட்டுமே ஆசிரியர்கள் மேற்கொள்வர். மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் பணி ஆசிரியர்களிடமே ஒப்படைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்

2381 அரசு நடுநிலைப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் துவக்கம் மற்றும் ஆசிரியர் நியமனம் பற்றி தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் - 09-01-2019

உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகள் உடன் 3500 தொடக்க நடுநிலைப்பள்ளிகளை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் ஜேக்டோ ஜியோ கல்விச்செயலரிடம் வலியுறுத்தல்


இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்றுவதற்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுவதை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது.

இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்றுவதற்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுவதை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது.* இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்றுவதற்கு தமிழக அரசு எடுத்து வரும் முயற்சியினை முற்றிலுமாக கைவிட வேண்டும். 
ஏற்கனவே ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கையாள ஆசிரியர் பயிற்சி முடித்தும் இடைநிலை ஆசிரியர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே நியமிக்கப்பட்டார்கள். தற்போது அதனை யும் குறைத்து அங்கன்வாடிக்கு எல்.கே.ஜி .,யு.கே.ஜி வகுப்புகள் எடுக்கக்கூறி deputation என்ற பெயரில்மாற்றம் செய்ய தமிழக அரசு எடுத்து வரும் முயற்சி கண்டனத்துக்குரிய து. (TNOU )தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மூலம் தமிழகத்தில் மாவட்டம்தோறும் 1000திற்கும் மேற்பட்ட மகளிர் *diploma in primary teacher
education* பட்டயப் படிப்பு முடித்தவர்கள் உள்ளார்கள். இந்தப் படிப்பிற்கு தமிழக அரசு அங்கீகாரம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே படித்தும் வேலை கிடைக்காத எத்தனையோ பயிற்சி பெற்ற இம்மகளிர்களைத் தேர்வு செய்து அங்கன்வாடி எல்கேஜி யுகேஜி வகுப்புகள் நடத்த நியமிக்க வேண்டுகிறோம். மேலும் அவ்வாறு நியமிக்கப்படும் போது குழந்தைகளின் உளவியல் படித்து பயிற்சி பெற்ற மகளிர்கள் நியமிக்கப்படும் போது மட்டுமே அரசின் திட்டம். வெற்றியடையும். அதனைவிடுத்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை எடுக்கும் இடைநிலை ஆசிரியர்களை எல் கே ஜி யுகேஜி வகுப்புகள் மாற்றப்பணியில் நியமிப்பது,அவசர கோலத்தில் அள்ளித் தெளிப்பதை போல் திட்டமிடாத வகையில் இதனை செயல்படுத்துவதை
*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறோம்* மேலும் ஒரு ஒன்றியத்தில் காலி பணியிடங்கள் உள்ள நிலையில், ஒன்றியத்தில் ஆசிரியர் தேவை உள்ள பள்ளிகளுக்கு வழங்காமல் அவர்களை அங்கன்வாடி பள்ளிக்கு மாற்றி நியமிக்கப்படுகிறார்கள் இது மிக மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்க நிகழ்வு. இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மாற்றி நியமிக்கும் இந்த முடிவினை முற்றிலுமாக கைவிட்டு மாற்று வழி ஏற்படுத்தி உளவியல் அறிந்து அரசு செயல்பட வேண்டுகிறோம். *செ.முத்துச்சாமி Ex.MLC., மாநிலத் தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

புகையில்லா மாசற்ற போகி கொண்டாட சொல்லி மாணவர்களுக்கு அறிவுரை வழங்க இயக்குனர் உத்தரவு

TET Not Necessary For Already Working Government Teachers - High Court Judgement Order Published!

CLICK HERE -TO DOWNLOAD

அரசு ஆணை எண் 11 D / பொது ( பல்வகை ) துறை / நாள் 8.1.19-வருகின்ற 14.01.2019 அன்று அனைவருக்கும் விடுமுறை.அதற்கு பதிலாக 09.02.19 சனி வேலை நாள்.

CLICK HERE TO DOWNLOAD - 14.01.2018 - LOCAL HOLIDAY 

G.O Ms : 5 - Pongal Bonus Announced For Govt Teachers & Employees

Click here to download - Pongal Bonus 

ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.500: அரசாணை வெளியீடு.C,D பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்றோர்களுக்கு மட்டுமே

CLICK HERE TO DOWNLOAD  - -GO NO 6 DATE 8-01-2018

'C''மற்றும் 'D" பிரிவு பணியாளர்களின் ஊதிய விகிதங்கள்


தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க முடிவு

தமிழகம் முழுவதும் சுமார் 80,000 ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆந்திரா,கேரளா போன்ற மாநிலத்தில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பிற்கு செல்லும் மற்ற மாநில மாணவ மாணவிகளை விட தமிழக மாணவ மாணவிகள்தான் அதிக ஈர்ப்பு தன்மையுடன் கல்வியை கற்பதாக அங்குள்ள பயிற்சியாளர்கள் பெருமிதத்துடன் சொல்கிறார்கள்.

தமிழகத்தின் 33வது மாவட்டமானது கள்ளக்குறிச்சி

33 வது மாவட்டம் கள்ளக்குறிச்சி
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள  கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டது- முதல்வர்   தமிழகத்தின் 33 வது மாவட்டமானது கள்ளக்குறிச்சி

புகார்: இலவச நோட்டுகள் கிடைக்கவில்லை கல்வித்துறை கப்சிப்!! ( பத்திரிக்கை செய்தி)

பொங்கல் கருணைத் தொகை அரசாணை வெளியீடு




போகி அன்று உள்ளூர் விடுமுறை அரசு அறிவிப்பு*

*போகி அன்று உள்ளூர் விடுமுறை அரசு அறிவிப்பு* வரும் திங்கட்கிழமை 14. 1.19 அன்று போகி பண்டிகைக்கு விடுமுறை அதற்கு பதிலாக 9.2.19 சனிக்கிழமை ஈடு செய்யும் வேலை நாளாக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் விடுமுறையாக 13 முதல் 17 வரை ஞாயிறு முதல் வியாழன் வரை விடுமுறை என அரசு அறிவித்துள்ளது

மதுரையில் ஒருங்கிணைப்பாளர்கள் பேட்டி : ஜன.22 முதல் ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம்

வரும் 22ம் தேதி முதல் ஜாக்டோ - ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் என மதுரையில் நடந்த கூட்டத்துக்குப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மதுரையில் ஜாக்டோ - ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நேற்று  நடந்தது. இதன்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன் ,சேகர், செல்வராஜ், சுரேஷ் ஆகியோர் அளித்த பேட்டி:

வரும் 22ம் தேதி முதல் ஜாக்டோ - ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறது. 

22.1.2019 முதல் ஜேக்டோ ஜியோ சார்பான கலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு. மதுரையில் முடிவு செய்யப்பட்டது. காணொளி


ஜாக்டோ-ஜியோ ஜனவரி-22 முதல் வேலைநிறுத்தம் அறிவிப்பு

ஊதிய முரண்பாடுகளை களையக் கோரியும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும் ஜனவரி 22 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மதுரையில் நடந்த ஜாக்டோஜியோ உயர்மட்ட குழு கூட்டத்தில் அறிவிப்பு




மத்திய அரசு ஊழியர்களின் (ஈட்டிய விடுப்பு)விடுமுறை விதிகளில் புதிய திருத்தங்கள்!

பல மத்திய அரசு ஊழியர்கள் வேலை நாட்களில் விடுமுறைகளை எடுக்காமல் அவற்றைச் சேமித்து ஓய்வு பெறும் போது பணமாகப் பெறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.ஆனால் ஏழாவது ஊதியக் குழு இந்த விதிகளில் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.

புதிய விதிகள் அமலுக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் கண்டிப்பாக 20 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை எடுத்தே தீர வேண்டும்.மேலும் ஒரு வருடம் முடிந்து அடுத்த வருடம் செல்லும் போது 10 நாட்கள் விடுமுறையை மட்டுமே கொண்டு செல்ல முடியும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் விடுமுறை எடுக்க உரிமை உண்டு.ஆண்டுக்கு 10 நாட்கள் தற்செயல் விடுப்பு, 19 நட்கள் அறிவிக்கப்பட்ட விடுமுறை போன்றவையும் உண்டு. இதுவே பாதுகாப்புத் துறை சார்ந்த ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 60 நாட்கள் விடுமுறை வழங்கப்படும்.தற்போது ஏழாவது ஊதிய குழு விடுப்பு விதிகளில் மாற்றங்களைக் கொண்டு வர பரிந்துறைத்து உள்ளதால் என்ன செய்வது என்று மத்திய அரசு ஊழியர்கள் விழித்து வருகின்றனர்.

2,000 அங்கன்வாடி மையங்களில் உபரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்: தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

தமிழகம் முழுவதும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட உள்ள 2 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில், தொடக்கப்பள்ளிகளில் உபரியாக அடையாளம் காணப்பட்ட ஆசிரியைகளை நியமிக்கும்படிதொடக்கக்கல்வி  இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப்பள்ளிகள் தாய்மொழியுடன் கூடிய ஆங்கில வழிபள்ளிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தனியார் பள்ளிகளை போன்று தொடக்கப்பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை  தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதற்கேற்ப அங்கன்வாடி மையங்களை நர்சரி பள்ளிகளாக மாற்றும் முடிவை அரசு எடுத்தது. முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு மிக அருகில் உள்ள 2 ஆயிரம் அங்கன்வாடி மையங்களை நர்சரி பள்ளிகளாக மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

*ஜாக்டோ- ஜியோ வழக்கு விவரம்

வருகின்ற (09.01.2019) அன்று திரு. ஸ்ரீதர் குழு மற்றும் திரு. சித்திக் குழுவின் அறிக்கையின் படி அரசால் என்ன செய்ய முடியும் என்பதை சமர்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் (11.01.19) அன்று மீண்டும் வழக்கு வருகிறது. அன்று தீர்ப்பு வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பு!!

இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு நீதிமன்றம் மூன்றுவருட சிறைதண்டனை அறிவித்ததால் பதவியை ராஜினாமா  செய்துள்ளார். அவர் வகித்த பதவி அமைச்சர் செங்கோட்டைக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டு முதல் ஒன்பதாம் வகுப்பிற்கு முப்பருவ கல்வி முடிவுக்கு வந்து ஒரே புத்தகமாக வழங்க அரசு முடிவு


ஜனவரி 8,9 ஆகிய தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தத்தப் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். - தலைமை செயலர்- கிரிஜா வைத்தியநாதன்!


DSE அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப்பதிவு ( பயோமெட்ரிக் முறை) இந்த மாதம் (ஜனவரி) முதல் அமல்படுத்தப்படும் 👉தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

CLICK HERE -TO DOWNLOAD DSE-DIR.PRO

Learning Outcomes Traning for all DEO's -SCERT Order

Click here-Deo Training Proceeding

G.O. No. 12 - dated 02-01-2019 - NHIS Scheme for 74 additional Approval Hospital regarding

CLICK HERE TO DOWNLOAD G.O

அரசு உயர்நிலை மேல்நிலை பள்ளிகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் அனைத்துக்கும் ஆதாருடன் இணைந்த தொடு உணர் கருவிகள் உடன் நிறுவ இயக்குனர் உத்தரவு




web stats

web stats