Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CM CELL REPLY
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- Pay Detail download
- pedagogy
- PENTION
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRB
- UGC
- university news
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ

WHAT IS NEW? DOWNLOAD LINKS
அரசின் பெரும்பகுதி நிதி ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவிடப்படுகிறது - போராடும் அரசு ஊழியர்கள் இதை சிந்திக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமி
தமிழக அரசின் பெரும்பகுதி நிதி, அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவாகிறது, அதனால், கூடுதல் சம்பளம் கேட்டு போராடுவோர் சிந்திக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி பேசினார்.
சேலம் மாவட்டம், இடைப்பாடியில் புதிய கட்டடங்கள் திறப்பு மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
👆🏻அரசாணை எண் 140/2018 நாள் 25.4.18 ல், நமது அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் பெற்ற தீர்ப்பின் அடிப்படையில் ,காலமுறை ஊதிய உயர்வு நாளூக்கு முன்பு ஒய்வு பெற்றவர் எந்த காலத்தை சேர்ந்தவர் ஆக இருந்தாலும் அவருக்கு ஒரு ஊதிய உயர்வு கருத்தியலாக அளித்து ஓய்வூதிய பயன்களை உயர்த்தி 31.12.2014 முதல்பணப்பயன்களை பெறலாம்! அனைவருக்கும் தெரிவியுங்கள்.👆🏻
மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புதிய பாடத்திட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை, ஆன்லைன் தேர்வு நடத்தும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.தமிழக பள்ளிக்கல்வித்துறையில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது. பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரனின் நேரடி மேற்பார்வையில், புதிய பாடத்திட்ட தயாரிப்பு மற்றும் புத்தக தயாரிப்பு பணிகள், நடந்து வருகின்றன.
வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 ஆகிய பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதில், பிளஸ் 1 தவிர, மற்ற வகுப்புகளுக்கு, முதல் பருவ தேர்வுக்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, மாவட்ட வாரியாக பள்ளிகளுக்கு அனுப்பப் பட்டுள்ளன. இந்த புத்தகங்கள், ஜூன், 1ல், பள்ளிகள் திறக்கப்படும் நாளில், மாணவர்களுக்கு வழங்கப்படும்.இந்நிலையில், புதிய பாடத்திட்டத்தில், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைன் தேர்வு முறையை, பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த உள்ளது.
இடைநிலை ஆசிரியர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த கல்வி அமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்- தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் திருமிகு செ.முத்துசாமி Ex.MLC.
இடைநிலை ஆசிரியர்களுக்குள்ளேயே உள்ள ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி சென்னையில் 2009 க்கு பிறகு நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாநிலை ப்போராட்டம் இருந்து வந்தனர்.
இப்பிரச்சினையின் தீவிரத்தினை உணர்ந்தும், போராட்டக்களத்தில் பல பெண் ஆசிரியர்கள் உட்பட 100 க்கும்மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு கல்வித்துறை அமைச்சர் அவர்களே நேரடியாக தலையிட்டு அமைப்பாளர்களுடன் பேசி தீர்வுகாண வேண்டும் என கல்வி அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் திருமிகு செ.முத்துசாமி Ex.MLC அவர்கள் நேற்று காலை வேண்டுகோள் விடுத்த நிலையில்
மாலையில் கல்வி அமைச்சர் மாண்புமிகு கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் யாரும் எதிபாராவண்னம் போராட்டக்களத்திற்கே வந்து பேச்சு நடத்தி முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசென்று கோரிக்கையை நிறைவேற்ற உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
அமைச்சரின் நேரடியான நடவடிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நெஞ்சார மனத்துடன் பாராட்டும் ,நன்றியும் தெரிவித்துக்கொள்கிறது.
போராடும் இடைநிலை ஆசிரியர்களை உடன் அழைத்துப்பேசி தீர்வு காண கல்வி அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் திருமிகு செ.முத்துசாமி வேண்டுகோள்
இடைநிலை ஆசிரியர்களுக்குள்ளேயே
உள்ள ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி சென்னையில் 2009 க்கு பிறகு நியமனம் பெற்ற இடைநிலை
ஆசிரியர்கள் தொடர் உண்ணாநிலை ப்போராட்டம் இருந்து
வருகின்றனர்.இதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தது
. இந்நிலையில் போராடும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களுடன் நேற்று கல்வி இயக்குனர் பேச்சு
நடத்தியதும் அது முடிவு எட்டப்படாமல் முடிந்ததும் அறிய முடிந்தது. இப்பிரச்சினையின்
தீவிரத்தினை உணர்ந்தும், போராட்டக்களத்தில் பல பெண் ஆசிரியர்கள் உட்பட 60 க்கும்மேற்பட்டோர்
உடல்நிலை பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு இயக்குனர்,கல்வித்துறை செயலர் போன்ற அதிகாரிகள்
அளவிலான பேச்சுவார்த்தைகளை தவிர்த்து கல்வித்துறை அமைச்சர் அவர்களே முதல்வர் மற்றும்
நிதி அமைச்சர் அவர்களின் ஒப்புதலுடன் நேரடியாக தலையிட்டு தம் தலைமையில் அதிகாரிகள்
மற்றும் போராட்ட அமைப்பாளர்களுடன் பேசி போராட்டத்திற்குண்டான
கோரிக்கைகள் மீது தீர்வுகாண வேண்டும் என கல்வி அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் திருமிகு செ.முத்துசாமி
Ex.MLC அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வறிக்கை fax & email மூலம் கல்வி அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது
லஞ்சம் வாங்கிய AEEOக்கு 3 ஆண்டுகள் சிறை
அறிவியல் ஏ.இ.ஓவாக இருந்த திரு முத்துக்கிருஷ்ணன் திருச்செங்கோடு ஏ.இ.ஓவாக மாறுதல் பெற்று பகுதி ஒன்றில் ஏ.இ.ஓ வாக பணியாற்றினார்.....இவர் மீது இலஞ்ச ஒழிப்பு வழக்கு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் நடைபெற்று நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது...45 வயதில் ஏ.இ.ஓ வாக வந்தவர் இப்போது இவருக்கு 55 வயதாகிறது சர்வீஸில் பத்து வருடம் வழக்கு நடத்தவே போய் விட்டது. தீர்ப்பும் அவருக்கு எதிராக வர இனி இவர் பனிக்காலம் முழுவதுமே வழக்குக்கே போய்விட்டதை நினைக்கும் போது வருத்தமாகத்தான் உள்ளது.
....இது மற்ற இலஞ்சம் பெறும் அதிகாரிகளுக்கும் உதாரணமாக இருக்கட்டும்.......நேர்மை தவறி...கை நீட்ட இறங்கினால் அதற்கு அதிகார பலத்தையும் பயன்படுத்தினால்... நிலைமை எப்படி கொண்டுப்போய் விடும் என்பதை இதை விட உதாரணமாக இருக்கமுடியாது.
தமிழக கல்வித்துறை வரலாற்றில் முதன் முறையாக AEEO சி. சித்ராவுக்கு அபராதத்துடன் ஒழுங்கு நடவடிக்கை - மாநில மனித உரிமை ஆணையம் தீர்ப்பு :-
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் உதவித்தொடக்கக்கல்வி அலுவலராக பணிபுரிந்து தற்போது ஆலங்காயம் ஒன்றியத்தில் AEEO ஆக பணிபுரியும் திருமதி. சி. சித்ரா அவர்கள் வாணியம்பாடி சென்னாம்பேட்டையில் பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கி வந்த திரு.வி.க நிதியுதவி நடுநிலைப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி நீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவர் காலனியில் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்ய வழங்கிய தீர்ப்புக்கு கட்டுப்பட்டாததாலும், மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் ( DEEO) ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், சத்துணவு, சீருடை வழங்க 5 முறை உத்தரவிட்டும் AEE0 சித்ரா வழங்காத காரணத்தினாலும், பள்ளியின் தாளாளர் வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தார், மாவட்ட ஆட்சியருக்கும் மதிப்பு
ஆசிரியர்களுடன் தொடக்கக் கல்வி இயக்குநர் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு இல்லை
தொடக்க கல்வி இயக்குநருடன் போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களின் பொறுப்பாளர்கள் நேற்று (25.04.2018) இரவு நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங்கை, மே மாதம் கடைசியில் நடத்த, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னை: அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங்கை, மே மாதம் கடைசியில் நடத்த, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். முழுமையாக ஒரு கல்வி ஆண்டில், ஒரே இடத்தில் பணியாற்றியோர், இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும். ஆண்டுதோறும், மே மாத துவக்கத்தில் கவுன்சிலிங் துவங்கி, மாத இறுதியில் முடிக்கப்படும். புதிய கல்வி ஆண்டில், வகுப்புகள் துவங்கும்போது, புதிய இடத்தில் ஆசிரியர்கள் பணிக்கு செல்வர்.இந்த ஆண்டு, தொடக்கப் பள்ளிகள் உட்பட, அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆன்லைன் முறையில் வெளிப்படையான கவுன்சிலிங்கை நடத்த, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை விபரங்கள், மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டு, ஆன்லைன் முறையில், தகவல்கள் தொகுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது
AEEO - க்கு ₹2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு
பள்ளி மாணவர்களுக்கு அரசு புத்தகம், மதிய உணவு வழங்க மறுத்த உதவி தொடக்க கல்வி அலுவருக்கு ₹2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர், அதேப்பகுதியில் திரு.வி.க என்ற பெயரில் நடுநிலைப்பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். அந்த பள்ளியில் 103 மாணவர்கள் படித்து வந்துள்ளனர்.
பள்ளிக்கு அரசு நிதி உதவியின்படி மாணவர்களுக்கு இலவச புத்தகம், உடை உணவு என அனைத்தும் வழங்கப்பட்டு வந்துள்ளது. பின்னர், சிவில் வழக்கில் நீதிமன்ற உத்தரவின் படி பள்ளி இடமாற்றம் செய்யப்பட்டது.
ஒரு நபர் குழு பரிந்துரை செய்தால்தான் ஊதிய முரண்பாடுகளை களைய முடியும்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
ஒரு நபர் குழு பரிந்துரை செய்தால்தான் ஊதிய முரண்பாடுகளை களைய முடியும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
7வது ஊதியக்குழு பரிந்துரைகளின் படி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய ₹20,600 முதல் 65,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தனி ஊதியம் ரூ.750 முதல் ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு மட்டுமன்றி, இந்த ஊதியகுழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதன் மூலம் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கு ஒரு நபர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
ஊதிய முரண்பாடு : அரசாணை திருத்தம்
ஊதிய முரண்பாடுகளை களைய, ஒரு நபர் கமிட்டி அமைத்த அரசாணையில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய, நிதி செலவினத் துறை செயலர், சித்திக் தலைமையில், ஒரு நபர் கமிட்டியை, பிப்., 19ல், தமிழக அரசு அமைத்தது.
'இக்கமிட்டி, தங்களிடம் வரும் கோரிக்கைகளை பரிசீலித்து, தேவையான பரிந்துரைகளை, ஜூலை, 31க்குள், அரசிடம் சமர்ப்பிக்கும். எனவே, கமிட்டி கேட்கும் அனைத்து தகவல்களையும், துறைத் தலைவர்கள் தெரிவிக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டு உள்ளது.
போராடும் இடைநிலை ஆசிரியர்களின் நிலையினை கருத்தில் கொண்டு கோரிக்கை வெற்றிபெற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வாழ்த்து
சென்னையில் போராடும் இடைநிலை ஆசிரியர்களின் நிலையினை கருத்தில் கொண்டு கோரிக்கை வெற்றிபெற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது என அக்கூட்டணியின் மாநிலத்தலைவர் திரு மிகு செ.முத்துசாமி Ex.MLC தெரிவித்துள்ளார்.
மேலும்போராடும் களத்தில் உள்ள அதன் மாநில ஒருங்கிணைப்பாளர்களை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு உடல் வருத்தி போராடும் இடைநிலை ஆசிரியர்களின் நிலைகண்டு வருந்துவதாகவும் ,இந்நிலையிலும் கண்டு கொள்ளா நிலையில் உள்ள தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவிப்பதோடு ,போராடும் ஆசிரியர் கோரிக்கை வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கூறினார்.
பள்ளிகள் மூடப்படாது:கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
''மாணவர் எண்ணிக்கை குறைவால், எந்த பள்ளியும் மூடப்படாது,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம், அன்னுாரில் நேற்று, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு, பள்ளிக்கல்வித் துறையில், பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. 'நீட்' தேர்வில் அதிக அளவில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியர் வெற்றி பெற, பயிற்சி அளிக்கப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)