rp

Blogging Tips 2017

போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக புதிய "Mobile App" - இயக்குனர் செயல்முறைகள்


தொடக்கக் கல்வி - அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆசிரியரின்றி உபரி பணியிடங்களை சரண் செய்ய இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

ஆசிரியர் பணியிடம் ஒதுக்குதல்-STAFF FIXATION-குறித்தான இயக்குனர் தெரிவித்த கருத்துகள் -சேலம் deeo அறிவுறுத்தல்கள்


தொடக்கக் கல்வி - 2018/19 STAFF FIXATION - கட்டாயம் பணிநிரவல் உண்டு, EMIS படி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம், உயர் தொடக்க வகுப்பில் 100 மாணவர்களுக்கு கீழ் இருந்தால் 2 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மட்டுமே - DEEO செயல்முறைகள்

தொடக்கக் கல்வி இயக்குனர் திரு .அ.கருப்பசாமி அவர்களின் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர்





இணைய வழியில் சான்றிதழ் சரிபார்ப்பு: புதிய திட்டத்தை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி

சான்றிதழ் சரிபார்ப்புக்காக போட்டியாளர்கள் நேரில் வருவதைத் தவிர்க்க, இனி அந்தப் பணி இணைய வழியிலேயே மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
இந்தப் புதிய திட்டம் குறித்து, டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
எழுத்துத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு உள்ளிட்டவை நடத்தப்படும். இப்போதுள்ள நடைமுறையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கென தரவரிசைப்படி தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இருமுறை சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்துக்கு வர வேண்டியுள்ளது. 

DGE : +1 ,+2 - Public Exam March 2018 - பள்ளி மாணாக்கர் பெயர்ப்பட்டியல் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு - இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கான ஆசிரியர் மாணவர் விகிதம்-- கல்வித்துறையால் வெளியிடப்பட்டது




​ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்தல் சார்ந்த பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் 055838-நாள்:18.04/2018-ன் படி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கான ஆசிரியர் -மாணவர் விகிதம் அட்டவணை

பிளஸ் 1 சேர்க்கை : கல்வித்துறை அதிரடி

பிளஸ் 1ல், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், கிராமப்புறங்களில், 15 பேர்; நகர்ப்புறங்களில், 30க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.பள்ளிகளில், ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதத்தை பராமரிப்பது குறித்து, அவரது உத்தரவு:ஒவ்வொரு பள்ளியிலும், பிளஸ் 1 வகுப்பில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நகர்ப்புற பள்ளிகளில், ஒரு பாடப்பிரிவில், குறைந்த பட்சம், 30 பேர்; கிராமப்புறங்களில், 15 பேர் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கையை விட, குறைவாக இருக்கும் பாடப்பிரிவுகளை நடத்த முடியாது.
குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கையை பராமரிக்கும் வகையில், வரும் கல்வி ஆண்டில், அதிக மாணவர்களை சேர்க்க, தலைமை ஆசிரியர்கள், முயற்சி எடுக்க வேண்டும்.ஆக., 1 நிலவரப்படி, இந்த எண்ணிக்கை இல்லாவிட்டால், குறைந்த மாணவர்கள் உள்ள பாடப்பிரிவு கலைக்கப்பட்டு, அருகில் உள்ள பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க வேண்டும்.இவ்வாறு, இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

NEW STAFF FIXATION CALCULATION- 1st STD TO 12th STD


ஸ்கூல் இருக்கா? இல்லையா? கல்வியாண்டில் இறுதி வேலை நாள் அறிவிப்பில் குளறுபடி, குழப்பத்தில் ஆசிரியர்கள்


பள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் அரசு, நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1.8.2017 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது தொடர்பான தகவல்கள் இடம்பெற்று இருந்தன.

ஊதிய முரண்பாடு குறித்து ஆராய ஒரு நபர் குழு அமைத்து உத்திரவு


அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவது ஏன் ? ஓர் அலசல்

அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவு, சீருடை, காலணி, மிதிவண்டி... உள்ளிட்ட பல விலையில்லாப் பொருள்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினியும் வழங்கப்படுகிறது. கல்விக் கட்டணமும் கிடையாது. இத்தனை சலுகைகள் இருந்தும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. சமீபத்தில், கல்வித் துறை தெரிவித்திருக்கும் ஓர் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த இரண்டு வருடத்தில், அரசுப் பள்ளிகளிலிருந்து 1 லட்சத்து 40,000 மாணவர்கள் வெளியேறியுள்ளனர்.

ஏன் இந்த நிலை? அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவதற்கான காரணங்கள் என்ன?

இதுகுறித்து ஆசிரியர்களிடம் பேசினோம்.

க.சரவணன், (தலைமை ஆசிரியர், டாக்டர் திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை):

''அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு மூன்று காரணங்களை முதன்மையாகச் சொல்லலாம். தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளின் கட்டடம், மைதானம், கழிவறை, ஆய்வுக்கூடம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் சிறப்பாகவே இருந்தாலும், அவற்றை சுகாதாரமாகப் பராமரிப்பதில் தொடர் கண்காணிப்பு இல்லை. ஆள்களை நியமிப்பதிலும் முழுமையை இல்லை. இது, முதல் காரணம். இதனால், அவற்றின் முழு பயன் மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. இரண்டாவது காரணம், கலை சார்ந்து கற்பிக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறை. நகரின் மையத்தில் ஓர் அரசுப் பள்ளி இருக்கும். மிகப்பெரிய விளையாட்டு மைதானமும் இருக்கும். ஆனால், உடற்கல்வி ஆசிரியர் பணி நிரப்பப்படாமல் இருக்கும். இதனைச் சரிசெய்வது மிகவும் முக்கியமானது. மூன்றாவது காரணம், பெற்றோர், ஆசிரியர், மாணவர் மூவருக்குமான உறவுச் சங்கிலி இல்லை. தனியார் பள்ளிகளில் அடிக்கடி பெற்றோர் - ஆசிரியர் சந்திப்புகள் நடத்தப்பட்டு, மாணவர் குறித்த செய்திகளை அவ்வப்போது பகிர்ந்துகொள்கின்றனர். அதுபோன்ற சந்திப்புகள், அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் நடப்பதில்லை. (விதிவிலக்காக சில பள்ளிகளில் நடத்தப்படலாம்) பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு என்பது, மாணவரின் கல்வி பற்றிய தகவல் பரிமாற்றமாக மட்டுமின்றி, அந்தப் பள்ளியைக் குறித்த உரையாடலாகவும் மாறும். அப்படி மாறும்பட்சத்தில், வளர்ச்சி சார்ந்த செயல்பாட்டை நோக்கி பள்ளியும் நகரும். இவை முறையாக நடைபெறும்பட்சத்தில், பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் எண்ணம் பெற்றோருக்கு உண்டாகும். எனவே, இவற்றைச் சரிசெய்ய வேண்டும்.''

அரசுப் பள்ளி

நா.கிருஷ்ணவேணி, (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நல்லம்பாக்கம்):

ஒரு பள்ளியில் மாணவரைச் சேர்க்கும் முடிவை, அந்த மாணவரின் பெற்றோர் எடுத்தாலும், சமூகச் சூழலும் அந்த முடிவை எடுக்கவைக்கிறது. மிக எளியப் பொருளாதார குடும்பத்தில் வசிப்போரும், தம் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் சேர்க்கவே நினைக்கின்றனர். தனியார் பள்ளியில் தன் பிள்ளை படிப்பது சமூக அந்தஸ்து என்பது அவர்களின் எண்ணமாக இருக்கிறது. எங்கள் பகுதியில் பார்த்தவரை, ஆங்கிலம் படிப்பதற்கு என்று மட்டுமின்றி, கெளரவத்துக்காகத் தனியார் பள்ளியை நோக்கிச் செல்லும் பெற்றோர் எண்ணிக்கையே அதிகம். அது சரியானது இல்லை என்பதைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்து, தற்போதைய குடும்பங்கள் இரண்டு குழந்தைகள் போதும் என்கிற திட்டமிடலுக்கு வந்துவிட்டனர். எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் குடும்பங்களில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள்தாம் இருக்கின்றன. (சில குடும்பங்கள் விதிவிலக்கு) இதனாலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையலாம் என்று நினைக்கிறேன்.''

ஆசிரியர்கள் சொல்லும் காரணங்களைக் கடந்தும், சில இருக்கின்றன எனக் கல்வி செயற்பாட்டாளர்கள் கருதுகின்றனர். அரசுப் பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவர்களில் சிலருக்கு தேர்வு நடத்தி, அந்தப் பகுதியின் தனியார் பள்ளியில், அரசு தனது செலவில் படிக்கவைக்கிறது. அப்படி ஒரு மாணவரை அரசு படிக்கவைக்குபோது, அவனின் தங்கையை, அந்தத் தனியார் பள்ளியிலேயே சேர்த்துவிட்டனர் பெற்றோர். 'அண்ணனை மட்டும் நன்கு படிக்கவைத்துவிட்டோம் என்கிற எண்ணம் தங்கைக்கு வந்துவிடக் கூடாதே' என்று கூறுகின்றனராம். இதனால், அரசுப் பள்ளிக்கு வரவேண்டிய ஒரு மாணவர் குறைந்துவிட்டார். மேலும், அரசுப் பள்ளியில் படிப்பது பெருமை எனும் மனநிலையைப் பெற்றோரிடம் தோற்றுவிக்கும் முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

💥💥💥 *🔴தமிழக அரசு ஊதிய முரண்பாடுகளை களைய, ஐஏஎஸ் அதிகாரி எம்.ஏ.சித்திக் தலைமையில் ஒருநபர் குழு* *-தமிழக அரசு*

*ஊதிய முரண்பாடுகள் களைய குழு*

ஊதிய முரண்பாடுகளை களைய நிதித்துறை தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்து உத்தரவு

ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஏ.சித்திக் தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு

மனுதாரர்கள் மற்றும் அரசுப் பணியாளர் சங்கங்களை நேரில் சந்தித்து பேசவும் ஒருநபர் குழு திட்டம்

அரசுப் பணியாளர்கள் தங்கள் கோரிக்கையை நேரிலோ, முகவரியிலோ அனுப்பலாம் - தமிழக அரசு

[email protected] என்ற முகவரியில் அனுப்பலாம் -

பள்ளிக்கல்வி-அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளிகளில் 01.08 படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதுகலை / பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்- தெளிவுரைகள் வழங்குவது சார்பு*

CLICK HERE

ஜாக்டோ ஜியோ -மே 8- சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் -11 மண்டலங்களில் பிரச்சாரம்- ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல் வெளியீடு

CLICK HERE

இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் - மதுரைக் கிளை - தீர்ப்பாணையின் நகல்.

மாதிரி மாணவர் சேர்க்கை விண்ணப்பம்


ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை - தொடக்கக் கல்வி இயக்குநர்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஏப்ரல் 21 முதல் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்படுகிறது என தெரிவித்திருந்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பால் ஏப்ரல் 19ஆம் தேதியுடன் பள்ளி வேலைநாள்கள் முடிவதாக இருந்த சூழ்நிலை ஏப்ரல் 20ஆம் தேதியும் பள்ளி வேலைநாள் என்ற நிலை உருவானது.
  சென்ற ஆண்டு மாறுதல் ஆணை பெற்று விடுவிக்கப்படாமல் (ஈராசிரியர் பள்ளிகளில்) உள்ள ஆசிரியர்களை தற்போது பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஆணைக்கிணங்க ஏப்ரல் 18 ஆம் தேதி விடுவித்து ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் பணியில் சேர்ந்துகொள்ள குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணை அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் இ.மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

DEE PROCEEDINGS- 01.01.2018 PANEL / SENIORITY LIST FOR TEACHERS - PREPARATION REG

DEE - 2017 - 2018 கலந்தாய்வில் பணிமாறுதல் பெற்று இப்போது பணி விடுவிப்பு செய்ப்படாமல் இருக்கும் ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்ய இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

மாறுதல் பெற்று விடுவிக்காமல் உள்ளவர்களை விடுவிக்க இயக்குனர் உத்திரவு

GPF வட்டி விகிதம் ஏப்ரல் 18 முதல் ஜூன்18 வரை. 7.6% அரசு அறிவிப்பி

மாணவர்களின் பெற்றோர் விபத்தில் இறந்தாலோ ஊனமடைந்தாலோ 75000 பெறுவதற்கான விண்ணப்பம் PDF FILE .

CLICK HERE

நாகை மாவட்டம் குத்தாலம் வட்டாரத்தில் பணி நிறைவு பெற்றோர்களுக்கான பாராட்டு விழா காட்சிகள்


TNPSC-மே 2018 துறை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க 19.4.2018 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.


கோடை விடுமுறைக்கு பின் புதிய பாடத்திட்ட பயிற்சி!!

கோடை விடுமுறைக்கு பிறகே, ஆசிரியர்களுக்கு, புதிய பாடத்திட்ட பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு பின், அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது. பள்ளிக் கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வரும் கல்வி ஆண்டில், 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.

பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு!.

குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஓய்வு பெற்றோர்-புதிய ஊதியதிருத்தத்தின் படி 01/01/16 முதல் 30/09/2017 வரையிலான நிலுவைத்தொகை இரண்டாம் தவணை நிறுத்திவைக்கப்பட்டதை உடனடியாக வழங்க உத்திரவு

Click here

TET தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டுமா?


நியூஸ் 7 செய்தி சேனல் மற்றும் தினமலர் நாளிதழ் இணைந்து வழங்கும்…
TET தேர்வில் தமிழகத்தில் அதிகளவில் தேர்ச்சியளித்த திண்டுக்கல் பயிற்சி மையத்தின்…
கனவு மெய்ப்பட...
TET தேர்வில் தேர்ச்சியடைவது குறித்தான ஒரு நாள் மாபெரும் விழிப்புணர்வு முகாம்!!
சிறப்புரை : நடிகர் தாமு, தமிழகத்தின் முதன்மை மாணவர் சிறப்பு பயிற்சியாளர்.
முதன்முறையாக தூத்துக்குடியில்!!
அனுமதி இலவசம்
இடம்: வ.உ.சி. கல்லூரி
நாள்: 22/04/2018, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9.30 – 1 மணி
முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு!
உங்களது நுழைவு டிக்கெட்டைப் பெற: http://www.vetripadikal.com/event-ticket
வகுப்புகள் நடைபெறும் இடம்:
திண்டுக்கல் பயிற்சி மையத்தின் வகுப்புகள் சென்னையில் மூன்று இடங்களில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும்,  தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், சிவகாசி மற்றும் வேலூர் மாவட்டங்களில் வகுப்புகள் தொடங்கப்பட்டு அட்மிஷன் நடைபெறுகிறது. உங்கள் வகுப்பு
களுக்கு அட்மிஷனை உறுதி செய்யுங்கள்
விவரங்களுக்கு : 044 - 48637811/24327811  & 8144447811.


web stats

web stats