Labels

rp

Blogging Tips 2017

பிளஸ் 2 உடனடித் தேர்வு: தட்கல் திட்டம் அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 உடனடித் தேர்வுக்கு, தட்கல் திட்டத்தின் கீழ், வரும் 6,7ம் தேதிகளில், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுத்துறை அறிவிப்பு: பிளஸ் 2 உடனடித் தேர்வு, விரைவில் துவங்க உள்ளது. இத்தேர்வை எழுத, ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், தட்கல் திட்டத்தின் கீழ், வரும், 6,7 தேதிகளில், www.dge.tn.nic.in என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம். 7ம் தேதி, மாலை, 5:00 மணி வரை, விண்ணப்பிக்கலாம்.
ஒரு பாடத்திற்கு, 85 ரூபாய் மற்றும் சிறப்பு கட்டணம், 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். இணையதளம் வழியாக பதிவிறக்கம் (டவுண்-லோட்) செய்த சலான் மூலம், வங்கியில், தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை, 8ம் தேதிக்குள், எஸ்.பி.ஐ., வங்கியின், ஏதாவது ஒரு கிளையில் செலுத்தலாம்.
இணையதளத்தில், பூர்த்தி செய்து, புகைப்படத்துடன் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணம் செலுத்திய ரசீது மற்றும் கடந்த மார்ச்சில் எழுதி பெற்ற மதிப்பெண் பட்டியலை இணைத்து, 14, 15 தேதிகளில், சென்னையில் உள்ள தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில், நேரில் சமர்ப்பித்து, ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a comment