Labels

rp

Blogging Tips 2017

அரசு போக்குவரத்து கழகத்தில் தொழிலாளர் குழந்தைகளின் கல்வி முன்பணம் இழுத்தடிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் மாநகர், புறநகர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. இவற்றில், ஒன்றே கால் லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்த புதிதில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதால், போக்குவரத்து கழகத்தில் நிலவிய நிதி நெருக்கடி ஓரளவு குறைந்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

ஆனாலும், நிர்வாக தரப்பில் நிதி நெருக்கடிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்களை வழங்காமல் போக்குவரத்து கழகங்கள் காலம் கடத்தி வருகின்றன.  போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் வட்டி இல்லா கடனாக கல்வி முன்பணம் ஸீ2 ஆயிரம் வழங்கப்படும். இத்தொகை, 10 மாதங்களாக தலா ரூ.200 வீதம் தொழிலாளர்களின் சம்பளத்தில்  பிடித்தம் செய்யப்படும்.


கல்வி முன்பணம் கேட்டு ஏப்ரல் மாதம் விண்ணப்பித்தவர்களுக்கு மே மாதம் வழங்கப்பட வேண்டும். தற்போது கல்வி முன்பணம் கேட்டு தொழிலாளர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் ஜூன் மாதம் முடிந்தும், இதுவரை கல்வி முன்பணம் வழங்காமல் நிர்வாகம் மவுனம் சாதிப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி முன்பணம் வழங்குவதில் ஒவ்வொரு ஆண்டும் அதிகாரிகள் அலட்சியத்துடன் இருந்து வருகின்றனர். தொழிலாளர்களின் சூழ்நிலைகளை புரிந்து கல்வி முன்பணம் வழங்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல, டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் 2 செட் சீருடைகள் மார்ச் மாதத்தில் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் ஜூன் மாதம் முடிந்தும் இதுவரை சீருடைகள் வழங்கப்படவில்லை. இது குறித்தும் அதிகாரிகள் பரிசீலனை செய்து சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment