rp

Blogging Tips 2017

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு(11/7/13) விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
"நீலகிரி உட்பட சில மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்" என, சென்னை வானியல் மையம் அறிவித்திருந்தது
. இந்த அறிவிப்பின் படி, நேற்று முன்தினம் இரவு முதலே, நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், தேவாலா, நடுவட்டம், அவலாஞ்சி, எமரால்டு ஆகிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரித்திருந்தது.
நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, நீலகிரியில் அதிகபட்சமாக, தேவாலா (இரண்டாம் சிரப்புஞ்சி) 44, அப்பர் பவானி 30, நடுவட்டம் 28 மி.மீ.,மழை அளவு பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக, 169 மி.மீ., மழை பதிவாகியது. நேற்று காலை 10:00 மணிக்கு மேல், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரித்திருந்தது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (இன்று) விடுமுறை அறிவிக்கப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment