Labels

rp

Blogging Tips 2017

இ-மெயில் ஒட்டுமொத்த தமிழர்களின் கண்டுபிடிப்பு: சிவா அய்யாதுரை பேச்சு

இ-மெயில் என்னுடைய கண்டுபிடிப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களின் கண்டுபிடிப்பாகவே நான் கருதுகிறேன் என்று விஞ்ஞானி சிவா அய்யாதுரை கூறினார்.
 திருவண்ணாமலை, எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் இ-மெயிலின் தந்தை எனஅழைக்கப்படும் சிவா அய்யாதுரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

 எஸ்.கே.பி. கல்விக் குழுத் தலைவர் கு.கருணாநிதி தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.குப்புசாமி, கல்லூரி முதல்வர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, "இணையும் சிந்தனை' என்ற தலைப்பில் வருங்கால பொறியாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
 இதில், சிவா அய்யாதுரை தன்னுடைய வாழ்க்கை, ஆய்வு விவரங்கள், அனுபவங்கள் குறித்து மாணவ-மாணவியருடன் பகிர்ந்து கொண்டார்.
 பின்னர், எம்ஐடி அமெரிக்க நிறுவனத்தின் நிறுவனராக உள்ள சிவா அய்யாதுரைக்கு, எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
 இவ்விருதை கல்லூரி தலைவர் கு.கருணாநிதி தலைமையிலான நிர்வாகிகள், சிவா அய்யாதுரையிடம் வழங்கினர்.
 விழாவில் சிவா அய்யாதுரை பேசுகையில், 1978-ல் நான் இ-மெயிலை கண்டுபிடித்தேன். இது என்னுடைய கண்டுபிடிப்பு மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் கண்டுபிடிப்பாகவே கருதுகிறேன் என்றார்.
 விழாவில், எஸ்.கே.பி. தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கே.செந்தில்குமார், கல்லூரி இயக்குநர் ஆர்.செல்வம், கல்லூரி கல்வி இயக்குநர் சி.குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment