rp

Blogging Tips 2017

முதன்மை கல்வி அலுவலர்கள், ஐந்து பேர், மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


முதன்மை கல்வி அலுவலர்கள்,ஐந்து பேர், மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.திருச்சி சி.இ.ஓ., செல்வகுமார்,விருதுநகர் மாவட்ட சி.இ.ஓ.,வாக(ரெகுலர் மற்றும் எஸ்.எஸ்.ஏ.,)
மாற்றப்பட்டுள்ளார்.
தனி சி.இ.ஓ., ராமசாமி,கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.தருமபுரி மாவட்ட எஸ்.எஸ்.ஏ.,சி.இ.ஓ., மகேஸ்வரி, அதே மாவட்டத்தில்,ரெகுலர் சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார் .டி.ஆர்.பி.,யில், துணை இயக்குனராகபணிபுரிந்து வந்த பூபதி,திருச்சி மாவட்ட சி.இ.ஓ.,வாகநியமிக்கப்பட்டுள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்ட சி.இ.ஓ.,சுகன்யா மாற்றப்பட்டு, காத்திருப்போர்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர்,இணை இயக்குனர்
பதவி உயர்வு பட்டியலில் உள்ளார்.எனவே, ஓரிரு நாளில், இணை இயக்குனர்பதவி உயர்வு பட்டியல் வெளியானதும்,இணை இயக்குனராக,கன்யா பொறுப்பேற்பார் என,கூறப்படுகிறது.பள்ளி கல்வித் துறையில், பலமாதங்களாக இழுபறியில் உள்ள
அதிகாரிகள் மாற்றம் மற்றும்பதவி உயர்வு, ஓரிரு நாளில் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கல்வித் துறையில், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்
துறை இயக்குனர் பணியிடம், இயக்குனர்நிலையில், பாடநூல் கழகச் செயலர்பணியிடம் மற்றும் நூலகத்துறை,தேர்வுத் துறையில்,இரு இணை இயக்குனர் பணியிடங்கள் ஆகியவை காலியாக உள்ளன.இரு இணை இயக்குனர்கள்,பதவி உயர்வு நிலையில் உள்ளனர்.சி.இ.ஓ.,க்களை தொடர்ந்து, தற்போதைய இணை இயக்குனர்கள் மற்றும் பல
இயக்குனர்கள் மாற்றம் செய்யப்படஉள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment