Labels

rp

Blogging Tips 2017

டிட்டோ-ஜேக் கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி உட்பட பெரும்பாலான சங்கங்கள் கலந்துகொண்டன, பிற சங்கங்களுக்கும் அழைப்பு

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு 4/8/13 அன்றைய செயற்குழு பிற சங்கங்களுடன் இணைந்து போராட பேச்சுவார்த்தை நடத்த 7 நபர் குழு அமைத்தது.

பின்னர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி மன்றம் சார்பில் அதன் பொதுச்செயளால்ர் திரு மிகு மீனாட்சி சுந்தரம் அவர்கள் ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு அனைத்து சங்கங்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது


இந்நிலையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 18.8.13 அன்று அதன் அலுவலகத்தில்அனைத்துசங்கங்களுக்கும் ஒருங்கிணைந்த போராட்டத்திற்கான முன் முயற்சி கூட்டம் நடத்தபடுவதாகவும்அதற்கு அழைப்பும் விடுத்தது.

அதன்படி 18/08/13  அன்று சென்னை ,எல்லீஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைமையகத்தில் நடைபெற்ற டிட்டோ-ஜேக் கூட்டத்திற்கு தொடக்கக்கல்வித்துறையில் உள்ள அனைத்து சங்கங்களையும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் திரு.கண்ணன் அவர்கள் தலைமை வகித்தார். மேலும் அச்சங்கம் சார்பில் சார்பில் பொதுச் செயலாளர் திரு.பாலசந்தர் (பொறுப்பு), மாநில பொருளாளர் திரு.மோசஸ் கலந்துகொண்டனர். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் முன்னாள் மாநில பொருளாளர் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்பு தலைவர் திரு.வையம்ப்பட்டி ராமசாமி, மாநில துணை த்தலைவர் திரு.ரக் ஷித் கலந்துகொண்டனர். தமிழ்நாடு ஆசிரியர் மன்றம் சார்பில் மாநில தலைவர் திரு.தியாடர் ராபின்சன்,  மாநில பொருளர் திரு.அம்பை அ. கணேசன் ஆகியோரும், தமிழக ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில துணை தலைவர் திரு.ர.துரை, மற்றும் திரு.சிங்காரவேலு ஆகியோரும், SSTA சார்பில் பொதுச் செயலாளர் திரு.ராபர்ட், மாநில தலைவர் திரு.ரெக்ஸ் ஆனந்த குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் எவரும் கலந்துகொள்ளவில்லை எனினும்
தொடக்கப்பள்ளிஆசிரியர் கூட்டணி அதன் போராட்டஆயத்த கூட்டங்களில் அதன் பொறுப்பாளர்கள்மாவட்டம் முழுவதும்கலந்து கொண்டுள்ளதன் காரணமாக கலந்து கொள்ள இயலவில்லை எனவும்,தமிழக ஆசிரியர் கூட்டணி  தனதுபொதுக்குழுவில் முடிவெடுத்தபின் கலந்துகொள்வதாகவும் ,திரு சேகர் தலைமையிலான பட்டதாரி ஆசிரியர் சங்கம் உயர்நிலை,மேனிலைபள்ளி சங்க சங்கப்பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசித்து வருவதாக கூறியுள்ளது என ஆரம்பப்பள்ளி ஆஅசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் திரு.கண்ணன் அவர்கள் கூட்டத்தில்தெரிவித்தார்.
மேலும்
 கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துசங்கப்பொறுப்பாளர்களும் ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு தங்கள் அமைப்பின் சார்பாக நிபந்தனைகள் ஏதுமற்ற ஆதரவைதெரிவித்தனர்.

 ஒருங்கிணைந்த போராட்டத்தினால் மட்டுமே அரசின் கவனத்தை பெற்று  கோரிக்கையை வென்றெடுக்க முடியும் என்ற கருத்து ஏற்கப்பட்டு அதற்காக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத அமைப்புகளின் மாநில பொறுப்பாளர்களுடன் இயக்கம் பாராமல் அதன் மூத்த பொறுப்பாளர்களுடன் பிற சங்கங்களும் தொடர்புகொண்டு பேசி முடிவெடுக்க வேண்டும் என அனைவராலும் கேட்டுக்கொள்ளப்பட்டது
மேலும் மூத்த சங்க நிர்வாகிகளான திரு முத்துசாமி,மற்றும் திரு மீனாட்சி சுந்தரம் ஆகியோர் மூலம் திரு ஈஸ்வரன் மற்றும் திரு.அண்னாமலை ஆகியோரை தொடர்புகொண்டு ஓன்றுபட்ட போராட்டத்திற்கு முன் முயற்சிகள் எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

 இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

1. அனைத்து சங்கங்களையும் சேர்த்து ஒருங்கிணைந்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.


2. அடுத்தக்கட்ட கூட்டத்தில் அனைத்து சங்கங்கள் சார்பில் அதன் பொதுச் செயலாளர்கள் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டது.


3. அடுத்தக்கட்ட கூட்டத்தில் இன்று கலந்துகொள்ளாத சங்கங்களுடன் பேசி அவர்களையும் அடுத்த கூட்டத்தில் பங்கு பெற செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

தகவல்
திரு. ரக்‌ஷித் 
மாநில துணைத்தலைவர்,
குறிப்பு
கூட்டம் சார்ந்த தகவல்கள் பொதுச்செயலர் திருமிகு.செ.மு,அவர்களுக்கும்,தலைவர் திரு.மணி,அவர்களுக்கும்,செயலர் (பொறுப்பு) செல்வராஜ் அவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment