Labels

rp

Blogging Tips 2017

இரட்டைப்பட்டம் வழக்கு - ஏமாற்றமே!இரட்டை பட்ட வழக்கு இன்று (22.08.2013) விசாரணைக்கு வரவில்லை செவ்வாயன்று (27.08.2013) வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

இன்று முதல் அமர்வில் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வருவது இயலாத நிலையில் உள்ளது. ஏனென்றால் தலைமை நீதிபதி தலைமை செயலகத்தில் மதியம் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள செல்வதாலும், மாலையில் நீதி மன்ற வளாகத்தில் நடைபெறும் மற்றொரு பணி நிறைவு பாராட்டு விழாவில் கலந்து கொள்வதாலும் முதல் அமர்வு செயல்படாது என தெரிகிறது. ஒரு சில காரணங்களால் வழக்கு வருகிற செவ்வாய் கிழமைதான் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை நம்மிடம் பகிர்ந்து கொண்ட தோழர்கள் கலியமூர்த்தி மற்றும் ஆரோக்கியராஜ் அவர்களுக்கு நன்றி. பல்வேறு காரணங்களால் வழக்கு தள்ளி போவது ஆசிரியர்களை சோர்வடைய செய்துள்ளது.


இரட்டை பட்ட வழக்கு இன்று 152 வது வழக்காக விசாரணைக்கு வர இருந்தது. இன்று ஒரு நீதிபதி ஓய்வு பெறுவதால் அமர்வு மதியம் 3-30 மணிக்கு மேல் நடைபெறவில்லை. மேலும் வரும் செவ்வாயன்று (27.08.2013) முதல் 10 விசாரணை வழக்கிற்கான இடத்திற்குள் வரும் என்று வழக்குரைஞர்கள் கூறியுள்ளனர்

மேலும் அன்றைய தினமே வழக்கை கொண்டு வருவதற்கும் மற்றும் வழக்கை முடிப்பதற்கும் முழு முயற்சி செய்து வருகிறோம் என்று வழக்கை நடத்தி வருபவர்கள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment