Labels

rp

Blogging Tips 2017

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவத்தின் சார்பில்  முதுகலை பட்டாதாரி ஆசிரியர்களுக்கு பாடப் பொருள் குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் வருகிற 26-ம் தேதி தொடங்கிநடைபெற இருக்கிறது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மற்றும் அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் சார்பில் இப்பயிற்சி முகாம் நடத்தப்பட
இருக்கிறது.இதில், மாணவ, மாணவிகள் பாடங்களில் பொருள்களை எளிதாக புரிந்து கொள்ளும், அதிகம மதிப்பெண் எடுக்க வைக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற வைக்கும் வகையிலும், 100 சதவீதம் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு இப்பயிற்சி வகுப்பு சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆங்கிலம், கணிதம், வணிகவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய ஒவ்வொரு பாடங்களிலும் தலா இரண்டுநாள்கள் ஆக.26-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து செப்-11ம் தேதி வரையில் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

No comments:

Post a Comment