Labels

rp

Blogging Tips 2017

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

உடுமலை : உடுமலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில், உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மங்கையற்கரசி தலைமை வகித்தார். வடிவேல்முருகன் வரவேற்றார். பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், இடைநிலை ஆசிரியர்களுக்கான தர ஊதியத்தை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இன்பக்கனி, வேணுகோபால் கோரிக்கைகள் குறித்து பேசினர். கோபாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment