Labels

rp

Blogging Tips 2017

"பாஸ்' வைத்திருந்தால் ஓட்டம் பிடிக்கும் பஸ் : சிறை பிடித்து மாணவியர் மறியல்

அன்னூர்: பஸ் பாஸ் உள்ள மாணவ, மாணவியரை அரசு பஸ்சில் ஏற்ற மறுப்பதை கண்டித்து அன்னூரில் மறியல் போராட்டம் நடந்தது.அன்னூர் சத்தி ரோட்டில் உள்ள அ.மேட்டுப்பாளையம், பசூர், பாசக்குட்டை பிரிவு,
பொங்கலூர், பெத்தநாயக்கன் பாளையம் ஆகிய ஐந்து இடங்களிலிருந்து, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் புளியம்பட்டி, கே.ஓ.எம்., அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் பவானி மேல்நிலைப் பள்ளிக்கு அரசு பஸ்களில், பஸ் பாஸ் பயன்படுத்தி செல்கின்றனர். "பி3' டவுன் பஸ், கோவை-பண்ணாரி, கோவை-சத்தி ஆகிய அரசு புறநகர் பஸ்கள் பள்ளி நேரத்தில் இயங்குகின்றன.நேற்று காலை 8.00 மணிக்கு, மாணவியர், பெற்றோர், மக்கள் என 300 பேர் கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில் பசூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஸ்தம்பித்து, வாகனங்கள் நீண்ட தூரம் நின்றன. இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் எஸ்.ஐ.,க்கள் அங்கு சென்றனர்.அவர்களிடம் மாணவியர் கூறுகையில், "சத்தி செல்லும் அரசு பஸ்சில் ஏறினால், பி3 டவுன் பஸ்சில் செல்லுங்கள் என்று கூறி ஏற்ற மறுக்கின்றனர். பி3 டவுன் பஸ்சில் ஏறச் சென்றால், இதில் அதிக மாணவர்களை ஏற்றினால், கிராமங்களில் உள்ள மாணவியரை ஏற்ற முடியாது என்று கூறி, அவர்களும் ஏற்றுவதில்லை. கோவை - பண்ணாரி பஸ்சை எக்ஸ்பிரஸ் பஸ்சாக மாற்றியதால், அதுவும் நிற்பதில்லை. பஸ் டிரைவர் மாணவியரை மரியாதைக் குறைவாக பேசுகிறார். அந்த பஸ்சை எடுத்துச் செல்ல விட மாட்டோம்,' என புகார் தெரிவித்தனர்.போலீசார் அவர்களிடம், சமாதானம் கூறி, ரோட்டிலிருந்து அருகே மண் பாதைக்கு அனுப்பினர். மறியலால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. சத்தி கிளை மேலாளர் பழனிச்சாமி வந்து பேசுகையில், "மரியாதைக்குறைவாக பேசிய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ""மாணவ, மாணவியரை பஸ்சில் ஏற்றாத டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இனி இது போல் நடக்காது,'' என, உறுதியளித்தார். இதையடுத்து, சிறை பிடித்து வைத்த சத்தி பஸ்சை விடுவித்து, மாணவ, மாணவியர் கலைந்து சென்றனர்.

Click Here

No comments:

Post a Comment