Labels

rp

Blogging Tips 2017

வாசிப்புத் திறன்--முக நூலில் ஆசிரியர்குரலின் பதிவு

கடந்த முறை ஏசர் ரிப்போர்ட் வந்ததிலிருந்து தமிழக பள்ளி,தொடக்கல்வி துறை அதிகாரிகள் வாசிப்புத் திறன் ,வாசிப்புத் திறன் என கூக்குரலிட தொடங்கி விட்டனர்.

கடந்த மாதம் கடலூர் மாவட்ட நடுனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அப்பள்ளியில் வாசிப்புத்திறன் காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தொடக்கப் பள்ளிகளில் கற்பிக்கும் முறை ஏ.பி.எல் என வந்ததலிருந்து மாணவர்கள் குழுவாக மீண்டும் மீண்டும் கூறுதல்,ஒருவர் சொல்லி பிற மாணவர்கள் சொல்லுதல் போண்றவை அரசு தொடக்க பள்ளிகளில் நடக்கவில்லை

மாணவனே கற்பான்,அவனே அடுத்தவனுக்கு கற்றுத்தருவான் என்ற
அதிமேதாவித்தனமான முறை

கல்விதுறை அதிகாரிகளால்கொண்டுவரப்பட்டு,ஏ.பி.எல்.அட்டைகள் முலம் பல   கோடி ரூபாய் , அட்டைகளுக்கும்,பயிற்சிகளுக்கும செலவிடப்பட்டன.

மாணவர்கல்வியில் நாட்டமுடைய ஆசிரியர்கள்,வசந்திதேவி போன்ற கல்வியாள்ர்கள்,திரு.செ.முத்துசாமி,ததிரு.அப்துல் மஜித் போன்ற ஆசிரிய இயக்க தலைவர்கள் கூறியும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இம்முறை அரசு பள்ளிகளில் மட்டுமே அமல்படுத்தப்பட்டதால்,வீட்டுப்பாடம் இல்லை,மனனப் பயிற்சி இல்லை,மேலும் பல காரணங்களால் அரசுபள்ளி மாணவ்ர்கள் குறைந்தபட்சம் வாசிக்கும் திறன் அற்றவர்களாயினர்.இம் முறைக்கு 10 மாணவ்ர்க்கு 1 ஆசிரியர் இருந்தால் சரியாக இருக்கும்.

ஏ.பி.எல்லில் ஐந்து ஆண்டுகள் படித்து ஆறாம் வகுப்பு வந்தவனுக்கு ஒன்றும் தெரியவில்லை என உயர் நிலை,மேனிலை ஆசிரியர்கள் கூறும் பரிதாப நிலை.

அரசு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமை,அவ்வப்போது பள்ளிகளின் கற்றல்,கற்பித்தல் திறனை மதிப்பிடாமை,தலைமையாசிரியர்கள் புள்ளி விவரம் மற்றும் நலத்திட்ட ஆசிரியர் என ஆக்கப்பட்டதாலும் மாணவ்ர்களின் வாசிப்புதிறன்,அனைத்துமே தற்போது அபாய கட்டத்தில் உள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகளில் பாதி அரசு தொடக்க நடுனிலைப் பள்ளிகள் மூட்ப்பட்டுவிடுமோ என அஞ்சும் நிலை உள்ளது,

இந்த பூனைக்கு யார் மணி கட்டுவார்? என்ற எதிர்பார்ப்பில் ஆசிரியர்குரல்.

தமிழ்வழிக்கல்வி,பொதுப்பள்ளிகள் இதனை எப்படி காக்கப்போகிறோம்.கருத்துக்களை பகிர்க.

No comments:

Post a Comment