Labels

rp

Blogging Tips 2017

நன்றி நன்றி நன்றி நமது பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி அவர்களுக்கு நன்றிகள் பல!!!!! திமலை மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-


திருவண்னாமலை மாவட்டம் இன்று ,திருவண்ணாமலை,கீழ்பென்னாத்தூர்,தண்டராம்பட்டு ,போளூர்,செங்கம் ,ஜவ்வாதுமலை உள்ளிட்ட பல ஒன்றியங்களின் உதவித்தொடக்ககல்வி அலுவலர்கள் தொடக்க்கக்கல்வி இயக்குனரின் உத்திரவுப்படி, டிட்டோஜாக் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டோருக்கான ஒருநாள் ஊதியம் பிடிப்பதற்கான ஏர்பாடுகளை மும்முரமாக செய்தனர்.இத [பற்றி அவர்களிடம் நமதுஇயக்கப்பொறுப்பாளர்கள் முறையிட்டமைக்கு,மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலரிடம் இருந்து எந்தவித உத்தரவும்(,வாய்மொழியாக்கக்கூட) வராமையால் இதுபோன்ற நடவடிக்கையை தாங்கள் மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

சிலர் மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டமைக்கும் சரியான பதில் வரவில்லை.

இது குறித்து வட்டாரப்பொறுப்பாளர்கள் மாவட்டச்செயலர் திரு.கே.பி.ரக்‌ஷித் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அவர் உடனடியாக நமது பொதுச்செயலரை அலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை விளக்கி இது குறித்து இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு வேண்டினார்



உடனடியாக நமது பொதுச்செயலர் திருமிகு.செமுத்துசாமி அவர்கள்,தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு திருவண்னாமலை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் சரியான வழிகாட்டுதல் இன்மையால் பல ஒன்றியங்களில் ஒருநாள் சம்மள பிடித்தம் செய்ய ஏற்பாடுகள நடைபெறும்சூழலை விளக்கினார்
இது குறித்து இயக்குனர் “தாம் உடனடியாக திருவண்ணாமலை DEEO-க்கு சார்ந்த தகவல் கள்தெரிவிப்பதாக” உறுதி அளித்தார்.

அதுமட்டுமல்லாமல் உடனடியாக திருவண்னாமலை DEEO அவர்களுக்கு சம்மள பிடித்த நடைமுறைகளை நிறுத்திவைக்க தொலைபேசியில் தகவல்கள் கூறப்பட்டன.

இதையடுத்து இன்று பிற்பகல் 3 மணியளவில் மாவட்டத்தொடக்கக்கல்விஅலுவலகம் சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவிதொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் முறையாக தொலைபேசி( வாய்மொழித்தகவல்) மூலம் ஒருநாள் சம்பளப்பிடித்தம் தொடர்பான அனைத்து செயல்பாட்டையும் நிறுத்திவைக்க அறிவுரைகள் வழங்கப்பட்டன

உடனடி நடவடிக்கை எடுக்க உதவிய நமது பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி அவர்களுக்கு நன்றிகள் பல!!!!!
என்றும் இயக்கப்பணியில்

ரக்‌ஷித்.கே.பி
திமலை.மாவட்டச்செயலர்
மற்றும்
மாநிலதுணைத்தலைவர்

No comments:

Post a Comment