Labels

rp

Blogging Tips 2017

சிதம்பரம் ஒன்றியத்தில் பல மாதங்களாக மாதத்தின் இறுதி வேலை நாளில் ஊதியம் வழங்கப்படாமை துரித நடவடிக்கைக்கு-கடலூர் மாவட்டகருவூல அலுவலர் திரு.கருணாநிதி அவர்களுடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திருமிகு.செ.முத்துசாமி அவர்கள் பேச்சு


கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்ட சார்நிலைக்கருவூலம் மூலம் ஊதியம் பெறும் சிதம்பரம் உள்ளிட்ட  பல்வேறு ஒன்றிய  ஆசிரியர்களுக்கு மாதத்தின் இறுதி வேலை நாளில் ஊதியம் கடந்த சில மாதங்களாக வழங்கப்படுவதில்லை .மாறாக அடுத்த மாதத்தின் 10 தேதி வாக்கிலேயே வழங்கப்பட்டது. இதனால் சிதம்பரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்ரிய ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் குழப்பமும் ,சம்பளம் எப்ப வருமோ என்ற மன உளைச்சலிலும் இருந்தனர். இவ்விஷயம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திருமிகு.செ.முத்துசாமி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

உடனடியாக அவர் இதற்கு காரணமான சிதம்பரம் சார் நிலைக்கருவூல அலுவலரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது.தோல்வியேமிஞ்சியது.

எனினும் நமது பொதுச்செயலர் அவர்கள் கடலூர் மாவட்டகருவூல அலுவலர் திரு.கருணாநிதி அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு சிதம்பரம் கருவூல அலுவலரின் செயலால் மாதத்தின் இறுதிநாளில் ஊதியம் கடந்த சில மாதங்களாக வழங்கப்பாடாததை கூறி அதனால் ஆசிரியர்கள் பலர். குறிப்பாக பெண் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளானதை எடுத்துக்கூறினார்


,
மாவட்டக்கருவூல அலுவலர் திரு.கருணாநிதி அவர்கள் பிரச்சிணையை கவனமுடன் கேட்டு, இது குறித்து புகார் ஏற்கனவே தமக்கு வந்துள்ளதாகவும்,சம்மந்தப்பட்ட கருவூல அலுவலருக்கு தக்க அறிவுறைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தான் ஒரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் மகனே என்றும் ஆசிரியரின் கஷ்டங்கள் தனக்கு நன்கு தெரியும் என்றும் கூறினார். இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாது எனவும் உறுதி அளித்தார்.

நமது பொதுச்செயலர்  அவரின் விராவான  செயலுக்கு நன்றிபாராட்டியதுடன், அவரது பணி சிறக்கவும் வாழ்த்துக்கள் வழங்கினார்.

கடலூர் மாவட்ட ஆசிரியர்கள் தங்களின் குறைகளை உடனுக்குடன் நமது பொதுச்செயலர் அலைபேசி எண்ணுக்கோ அல்லது

www.tntf.in வலைதள முகவரிக்கோ (taakootani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ) கோரிக்கைகள் தெரிவிக்கப்படுமாயின் உடனுக்குடன் உரிய அலுவலரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்
என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறோம்

No comments:

Post a Comment