Labels

rp

Blogging Tips 2017

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை அரசே ஏற்க வலியுறுத்தல்

அரசு நிர்ணயித்த கட் டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் பள்ளிகளை அரசே ஏற்க வேண்டும் என்று மாணவர் பெற் றோர் நலச்சங்கம் வலிய றுத்தி உள்ளது.பம்மலில் உள்ள ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட் ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்ற னர்.
இதன் கிளை ஸ்ரீ சங்கர வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி அதே பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு 5 வகுப்பு முடிக்கும் மாணவர்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படு வார்கள்.ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக்குலேஷன் நர்சரி அண்டு பிரைமரி பள்ளி யில் அரசு நிர்ணயித்த கட் டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கப்பட்டு வந்துள் ளது. எனவே, பள்ளிக்கு எதிராக மாணவர் பெற் றோர் பாதுகாப்பு நலச்சங் கம் சார்பில் தொடரப் பட்ட வழக்கு நீதிமன்றத் தில் விசாரணையில் உள் ளது.

இந்நிலையில் 5 வகுப்பு முடித்த மாணவர்களை மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ள நிர் வாகம் மறுக்கிறது. மாற் றுச் சான்றிதழ் பெற்றக் கொண்டு வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ள நிர் பந்தித்துள்ளனர்.எனவே, அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் வெள்ளி யன்று (ஏப்.25) டிபிஐ வளா கத்தில் உள்ள தனியார் பள்ளி கல்வி கட்டண நிர் ணயக்குழு தலைவர் சிங்காரவேலுவை சந்தித்து பள்ளிக்கு எதிராக புகார் அளித்தனர்.
அதனை பெற் றுக் கொண்ட அவர், நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை மாற்றுச் சான்றிதழ் வழங்க தடை விதிக்கவும், ஏற்கெனவே உள்ள நடை முறையில் மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண் டும் என்று மெட்ரிக் பள்ளி இயக்குநருக்கு பரிந்துரைப் பதாக கூறினார்.அதன்பின்னர் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிச் சையிடமும் பெற்றோர்கள் மனு அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட அவர், மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுக்கக் கூடாது என்று உத்தரவிடு வதாக கூறினார்.
இதன்பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய மாணவர் பெற்றோர் நலச் சங்கத்தின் தலைவர் செ. அருமைநாதன், அரசு நிர்ண யித்த கட்டணத்தை விட தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. சௌகார்பேட்டையில் உள்ள சுரேணா மெட்ரிக் குலேசன் பள்ளியில் 18 ஆயிரம் ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்ற னர். இதுபோன்ற பள்ளி களை கண்காணிக்க ஒரு குழு அமைக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக் கும் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றார்

No comments:

Post a Comment