Labels

rp

Blogging Tips 2017

உச்ச நீதிமன்றம் உத்திரவிட்ட பிறகும்,பணி நியமனம் வழங்காமல் 8 மாத இழுத்தடிப்புக்குபின் ,அவமதிப்பு வழக்கில் 3 வார காலத்தில் நியமன உத்திரவு வழங்குவதாக உறுதி

கரூர் மாவட்டத்தை சார்ந்த் திரு சுபாஷ் சந்திர போஸ் என்பவர் 2008 ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக  நியமிக்கப்பட்டார்.ஆயினும் அவரது நியமனத்தில் தவறு இருப்பதாகக்கூறி அரசு கடந்த பிப்ரவரி -2010 ஆம் ஆண்டு அவரை பணிநீக்கம் செய்தது.(DISMISSED FROM SERVICE)

               ஆயினும் அரசின் பணிநீக்க உத்திரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடுத்து வழக்கில் அரசு அவரை 3 வாரக்காலத்திற்குள் பணியில் நியமிக்க வேண்டும் என் தீர்ப்பு பெற்றார்

                    . ஆனால் தமிழக அரசு    அத்தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது.
                 அவ்வழக்கில் ஆசிரியர் திரு சுபாஷ் சந்திர போசுக்காக மூத்த வழக்கறிஞ்சர் திருமதி .நளினி சிதம்பரம் அவர்கள் வாதாடி அவ்வழக்கிலும் வெற்றி பெறப்பட்டது

                                          எனினும் அரசு பிடிவாதமாக கடந்த 8 மாதமாக ,உச்சநீதிமன்றம் உத்திரவிட்ட பிறகும் பணி ஆணை வழங்காமல் காலதாமதம் செய்தது.
                                 அதனை எதிர்த்து திரு .சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் மீண்டும் உச்ச நீதிமன்ற அமர்வில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்

                அவ்வழக்கு கடந்த 04.08.2014 அன்று நீதியரசர்கள் திரு. செலமேஸ்வரர் மற்றும் நீதியரசர் திரு.ஏ.கே.சிக்ரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் திரு சுப்ரமனியம் பிரசாத் அவர்கள் மனு தாரருக்கு 3 வார காலத்திற்குள் தீர்ப்பை அமுல் படுத்துவதாக( நியமனம் அளிப்பதாக) உருதி அளித்து,அதிவரை கால அவகாசம் கோரினார்.

வழக்கு விவரம்
CONMP.PET(C) No-289/2014
IN SLP(C)No-20755/2010
பின் குறிப்பு+
 5.8.14 மாலை தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில்  இருந்து நமது பொதுச்செயலர் திருமிகு செ மு  அவர்களை இயக்குனரின் நேர்முக உதவியாளர் தொடர்புகொண்டு, ”திரு சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு சாதகமாக நநீதிமன்ற உத்திரவு கிடைக்கப்பட்டுள்ளமையால் விரைவில் அவருக்கு உத்திரவு வழங்கப்படும் என” இயக்குனர் தெரிவிக்க கூறியதாக  தகவல் ட கூறினார்.

No comments:

Post a comment