rp

Blogging Tips 2017

ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் மாற்றம் கொண்டுவர முடியாது: பிரதமர் மோடி

ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் மாற்றம் கொண்டுவர முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகளிடம் நேரடியாக கலந்துரையாடியபோது மோடி இவ்வாறு தெரிவித்தார்.
தொழில்நுட்ப பயன்பாடுகளை அனுபவிக்கவிடாமல் மாணவர்களை தடுப்பது குற்றம் என்று மோடி கூறினார். விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசிய பிரதமர், மாணவர்கள் அவற்றில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். நாட்டில் பெரும்பாலான பள்ளிகளில் கழிவறைகள் இல்லாதது வருத்தம் அளிப்பதாகவும், இந்தியாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் மோடி கவலை தெரிவித்தார். கலந்துரையாடலின்போது மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்து பேசினார்.

No comments:

Post a Comment