Labels

rp

Blogging Tips 2017

பெண்கள் பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி

அரசு பள்ளிகளில் தற்காப்பு கலைகள் பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. அரசு பள்ளிகளில் பெண்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. இஸ்ரேலிய தற்காப்பு கலையான கிரவ் மகா என்ற கலையை கற்று தருகின்றனர். கடந்த 4 மாதமாக இலவசமாக மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசி வந்தால் மட்டும்
போதாது. அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அதற்கு இதுவே தகுந்த உதாரணமாகும். இதுவரை 550க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றுள்ளனர். ஆரம்ப நாட்களில் இந்த தற்காப்பு கலை பயிற்சியை நாங்க பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு 10 வகுப்புகள் கடந்த பிறகு தான் அந்த பயிற்சியோட அர்த்தம் புரிந்தது என்றார் பர்வினா என்ற மாணவி. பெண்களின் முன்னேற்றம் பற்றி பேசினால் மட்டும் போதாது. ஏனென்றால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. முதலில் பெண்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் திடமாக இருக்க வேண்டும்.
இந்த பயிற்சியில் நாங்கள் முதலில் கற்றுக்கொண்டது இதனை தான் என்றனர் இன்னொரு தரப்பு மாணவிகள். இன்னொரு பயம் என்னவென்றால் பயிற்சி அளிக்கும் ஆசிரியர் ஆண் நபர். முதலில் எங்களுக்கு தயக்கமாக இருந்தது. ஆனால் முதல் வகுப்பிலேயே இந்த அச்சம் முழுவதும் மறைந்தது. ஏனென்றால் பள்ளி மாணவிகள் எவ்வாறெல்லாம் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெளிவாகவும் எவ்வாறு இந்த பயிற்சியை தக்க சமயத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக கூறினார். இந்த பயிற்சியானது பெண்கள் தன்னைத் தானே எப்படி பாதுகாத்துக் கொள்வது என்று மட்டும் சொல்லித் தரப்படுவதில்லை. மனரீதியாக பெண்கள் தயாராக வேண்டும் என்பதையும் சேர்த்தே கற்றுத்தரப்படுகிறது.
கராத்தே அல்லது மற்ற விளையாட்டுகளை போல் உடல் பலம் கிரவ் மகாவுக்கு தேவையில்லை. ஆர்வமும், கவனமுமே முக்கியம். கவனத்திற்கு நாங்கள் மைன்ட் கேம்ஸும், விளையாட்டுகளும் வைத்துள்ளோம். மாணவிகள் அனைவரும் ஆர்வமாக கலந்துகொள்கின்றனர். சில மாணவிகள் பள்ளி முடிந்தும் சிறப்பு வகுப்புகளிலும் பங்கேற்கின்றனர். இந்த சிறப்பு வகுப்பில் 365 டிகிரி, எல்போ டெக்னிக் போன்ற பயிற்சிகளையும் வழங்குகிறோம். இந்த அட்வான்ஸ் டெக்னிக்கில் பெண்களுக்கு பிரச்சனை ஏற்படும் போது உடனடி எதிர்ப்பை காட்ட இது உதவும். இந்த டெக்னிக்கை பயன்படுத்தும்போது எதிராளியின் தாடையே உடைந்துவிடும் என்றார் பயிற்சியாளர் சந்தோஷ்குமார். பத்து வயதை கடந்த எவரும் இந்த தற்காப்பு கலையை கற்கலாம்.

No comments:

Post a Comment