Labels

rp

Blogging Tips 2017

ஆசிரியர் சமுதாயத்திற்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதி... தேவை உடனடி ஆசிரியர் பணிபாதுகாப்பு சட்டம்...

ஆசிரியர்கள் மீது மாணவர்கள்,பெற்றோர்கள்,அவர்களின் உறவினர்கள்,சமுதாயத்தை சேர்ந்தவர்கள்,மத அமைப்பினர் என்று தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்,ஆசிரியர்களை கைது செய்யும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கின்றன...
தற்போது கூட பெரம்பலூரில் பள்ளியில் விசில் அடித்த மாணவனை உடற்கல்வி ஆசிரியர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை செய்துகொள்ள,ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்...

மாணவன் இழப்பு பேரிழப்புதான்,அவன் அறியாமையால் செய்த செயலுக்கு ஆசிரியர் எவ்விதம் பொறுப்பாவார்...
அப்படியென்றால் ஆசிரியர்கள் மாணவனை கண்டிக்கக்கூடாதா...
அவனை நல்வழிப்படுத்தக்கூடாதா?
ஆசிரியரிடம் அடி வாங்காத மாணவன் பிற்காலத்தில் போலிஸிடம் அடிவாங்குகிறான் குற்றவாளியாக...
கல்விக்கூடங்கள் திறக்கப்படும் போதெல்லாம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன...
அரசாங்கமும்,கல்வி அதிகாரிகளும் 10,+2 ரிசல்ட் வேண்டும் என்று ஆசிரியர்களை நிர்பந்திக்கின்றன...
மாணவர்களை நல்வழிப்படுத்தாமல்,கண்டிக்காமல்,தண்டிக்காமல் எப்படி ரிசல்ட் கிடைக்கும்?
கண்டித்தால் ஆசிரியர்களை தாக்குவது,கைது செய்வது என்றால்,எந்த ஆசிரியர் மாணவர் நலனை நினைப்பர்...
எப்படியோ போகட்டும் என்ற மனநிலைக்கு வருவர்...
மாணவர் படிப்புதான் பாதிக்கப்படும்...
எதிர்கால இளைஞர் சமுதாயமே சீரழியும்...
அரசாங்கமும் கல்வி சமூக ஆர்வலர்களும் தலையிட்டு இப்பிரச்சினைக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்...
ஆசிரியர் நலனும் பாதுகாக்கப்படவேண்டும்,மாணவர் சமுதாயமும் மேம்பட வேண்டும்...

No comments:

Post a Comment