Labels

rp

Blogging Tips 2017

எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் பிப். 25, 26 தேதிகளில் விண்ணப்பிக்கலாம்

வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தக்கல்) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருச்சி, அரசு தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் (பொறுப்பு) இரா. வீரக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் ஆன்லைன் மூலம் பிப். 25, பிப். 26 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம். அரசு தேர்வுத் துறை மூலம் கல்வி மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள் மட்டுமே கருத்தியல் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். புதிய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள், தோல்வியுற்ற பாடங்களில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.

பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தைத் தவிர பிற பாடங்களில் தோல்வியுற்றவர்களும், பழைய பாடத் திட்டத்தில் அறிவியல் தேர்வில் தோல்வியுற்றவர்களில், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்து, 80 சதவீத வருகை பெற்றிருப்பவர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கு திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை, கடலூர், வேலூர், சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்.

கல்வி மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment