Labels

rp

Blogging Tips 2017

அரசாணை - வழிகாட்டல் நெறிமுறை யார் வெளியிடலாம்?

நண்பர்களே
சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்கள்
கல்விசார் வலைதளங்கள் என எல்லா ஊடகங்களிலும்,
அரசாணை 62 பள்ளிக்கல்வித்துறை,நாள்-13.03.2015 க்கு வழிகாட்டு நெறிமுறைகளை
ஓர் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்
ந.க.எண் ஏதுமின்றி ‘அன்புள்ள தலைமை ஆசிரியர்களே” என தொடங்கி
ஓர் கடித்ததை தன் கையொப்பம் இட்டு வெளியிட்டுள்ளார்
அது சார்ந்த சில சந்தேகங்கள்
1. அரசாணைக்கு வழி காட்டுதல் நெறிமுறைகள் வழங்க இயக்குனர் அவர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ள நிலையில் உதவிதொடக்ககல்வி அலுவலர் எவ்வாறு வெளியிடலாம்.
2.அந்த அதிகாரம் அவருக்கு யாரால் வழங்கப்பட்டது?

3. ஓர் அரசு அதிகாரி தன் அலுவலர் பதவியிட்ட இடத்தில் பச்சைமையினால் கையெழுத்திட்ட போது அதில் ந.க.எண்,நாள்,அலுவலத்தின் முகப்பு பெயர் ,அதிகாரியின் முன்னிலை என எதுவும் குறிப்பிடாத ,கடிதத்தில் கையொப்பம் இட்டது ஏன்?
4.சீ.ஆர்.சி பயிற்சி நாட்கள்,வேலைநாட்கள் அல்ல.அந்தநாட்கள் பயிற்சி நாட்கள் மட்டுமே.அவ்வாறு பயிற்சி நாட்களுக்கு (வேலை நாட்கள் அல்லாத நாட்களுக்கு) தற்செயல் விடுப்பு அளிக்கமுடியாது.அந்த நாட்களுக்கு கலந்துகொள்ள இயலாத நிலையை கடித வாயிலாக தெரிவித்தால் மட்டுமே போதும்.இந்நிலையில் அந்நாட்களுக்கு அனுமதிக்கப்பட்ட தற்செயல் வி டுப்பு மற்றும் பிறவிடுப்பு நாட்கள் ஈடு செய்யும் நாட்களாக மாற்ற இயலாது எனதெரிவித்திருப்பது எப்படி பொருந்தும்.

5.விடுப்பு நாட்களில் நடைபெற்ற சி.ஆர்.சி பயிற்சி நாட்களூக்கு மட்டுமே அனுமதி என அரசாணையில் கூறாத தகவலை crc நாட்களுக்கு மட்டுமே அனுமதி என கூறுதல் சரியா,


6.அரசாணையின் பொருளில் விடுமுறை நாளில் நடைபெற்ற abl.crc,alm ஆகிய பயிற்சிகளைக்குறிப்பிட்டுள்ளபோது CRC மட்டும் என வரையறுத்துள்ளது ஓர் அதிகாரிக்கு தகுமா?

7.அரசாணை வெளியான தேதி 13.04.2015 என குறிப்பிட்ட கடிதத்தில் கையெழுத்திட்டது சரியா?
சிந்திப்பீர்
தவறான
அதிகாரத்திற்கு மீரிய
வழிகாட்டுதல் நெறிமுறை
அரசு பதவியின் பெயரால்
கையொப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ளது
வன்மையாக
கண்டிக்கதக்கது

கே.பி.ரக்‌ஷித்,
மாநிலதுணைத்தலைவர்,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a comment