Labels

rp

Blogging Tips 2017

நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் மன அழுத்தத்தில் அரசு அலுவலர், ஆசிரியர்கள் தொடர் இயக்கம் நடத்த ‘ஜியோ’ முடிவு

தமிழக அரசு அலுவலர்கள் - ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் இயக்கம் மேற்கொள்வது என தமிழ்நாடு அனைத்து அரசுஅலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் இரா.சண்முகராஜன், தமிழ்நாடு தலைமை செயலக சங்கத்தின் தலைவர் ஜெ.கணேசன், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்க மாநிலத் தலைவர் கே.கணேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் இரா.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அனைத்துத் துறை ஊர்தி ஓட்டுநர் சங்க மாநிலத் தலைவர் நா.ஜெயக்கொடி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் தமிழரசன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு:தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் - ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து, மத்திய அரசு பணியாளருக்கு இணையான படிகள், காலிப்பணியிடம் நிரப்புதல், ஊதிய முரண்பாடுகள் களைதல், பதவிஉயர்வு வழங்குவதில் தேக்கநிலைநீக்குதல், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், பழைய முறையிலான தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்குதல், 50சதவீத அகவிலைப்படியினை ஊதியத்துடன் இணைத்தல், அரசு அலுவலர் நடத்தை விதிகளில் மாற்றம் மற்றும் புற ஆதார முறைரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தமிழக அரசிடம் அரசு அலுவலர் சங்கங்களின் சார்பில் பல்வேறு முறைகள் முன் வைக்கப்பட்டு அக்கோரிக்கைகள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாததால் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மிகுந்த பணிச்சுமையுடன் மன அழுத்தத்துடன் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில், தமிழக அரசில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர்களின் சங்கங்களும் இணைந்து தமிழ்நாடு அனைத்து அரசுஅலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு (ழுடிஎநசnஅநவே நுஅயீடடிலநநள டீசபயnளையவiடிn (ழுநுடீ) என்ற இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பில் பிரதான சங்கங்களாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமைச் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்துசெயலாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டமைப்பின் ஐந்தாவது கூட்டம் 10.3.2015 அன்று காலை 11 மணியளவில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் கூட்டரங்கில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், தமிழக அரசில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் - ஆசிரியர்கள் முக்கியமான வாழ்வாதார கோரிக்கைகள் வடித்தெடுக்கப்பட்டு தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிப்பது எனவும் தொடர்ந்து இக்கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தொடர்ச்சியான இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் முடி வெடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment