Labels

rp

Blogging Tips 2017

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல ஒன்றியங்களில் ஆன்லைன் ஊதியமுறைக்காக பணம் ஏதும் பெறாமலேயே வேலை முடித்து இன்று ஊதியம் பெற்று வழங்கிவிட்டனர்.



திருவண்ணாமலை மாவட்டத்தில் பல ஒன்றியங்களில் ஆன்லைன் ஊதியமுறைக்காக பணம் ஏதும் பெறாமலேயே வேலை முடித்து இன்று ஊதியம் பெற்று வழங்கிவிட்டனர். ஆனால்... செங்கம் ஒன்றியத்தில்.. வழக்கம் போலவே ஆசிரியர்களின் குறைகளை களைவதற்காக அல்லாமல் அலுவலக செலவினங்களை ஈடுசெய்யவே நாண்கடுக்கு கூட்டம் கூட்டப்பட்டது.ஆன்லைன் ஊதியமுறைக்கு பதிவேற்றம் செய்திட அலுவலகத்தில் இயலவில்லை. வெளியில் உள்ள பிரௌசிங் சென்டரில் தான் செய்யவேண்டும். நபர் ஒருவருக்கு ரூ 25 கேட்கின்றனர். நீங்கள் சம்மதித்தால் வெளியில் செய்யலாம் என கூறப்பட்டது. சரி உரிய நேரத்தில் ஊதியம் கிடைக்கட்டும், ஆசிரியர்களை இப்பணிக்கு பயன்படுத்துவது தவிர்க்கப்படுவதன் மூலம் ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் பாதிக்கப்படுவதும் தவிர்க்கப்படும் என்ற எங்கள் கருத்தையும் பதிவு செய்து, ரூ 25 ஐ தர சம்மதித்தோம். ஆனால் இன்று மாலைவரை மார்ச் ஊதியம் வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. பணம் வாங்காமல் ஊதியம் பெற்றுத்தந்தவர்களைப் பாராட்டுவோம், பணம் வாங்கியும் ஊதியம் பெற்றுத்தராதவர்களுக்கு சிறந்த அலுவலர்கள் என பாராட்டுவிழா நடத்துவோம்.

No comments:

Post a Comment