Labels

rp

Blogging Tips 2017

962 சத்துணவு மையங்களுக்கு "காஸ்' இணைப்பு தர உத்தரவு

: திருப்பூர் மாவட்டத்தில், "காஸ்' வசதியில்லாத, 962 சத்துணவு மையங்களுக்கு, நடப்பு கல்வியாண்டுக்குள் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
காதாரமான உணவு வழங்கவும், பணியாளர்களின் சிரமத்தை குறைக்கவும், சத்துணவு மையங்களில், "காஸ்' அடுப்பு வசதி ஏற்படுத்த, தமிழக அரசு முடிவு செய்தது. இத்திட்டத்தின்படி, சத்துணவு மையங்களில் "காஸ்' சிலிண்டர் வைப்பதற்கான தரைதளம், மேடை கட்டப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மையங்களில், 2012 முதல், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டு முடிவதற்குள், அனைத்து மையங்களுக்குள் "காஸ்' இணைப்பு அளிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது
.
சத்துணவு திட்ட அலுவலர்கள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில், 1,354 சத்துணவு மையங்கள் உள்ளன. 300 மையங்களுக்கு முழுமையாக "காஸ்' வசதி செய்யப்பட்டுள்ளது. 2014-15ல், 962 மையங்களுக்கு "காஸ்' வசதி ஏற்படுத்த, 2.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதும், ஒவ்வொரு ஒன்றியம் மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு, அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட சத்துணவு மையங்களில், "காஸ்' இணைப்பு வழங்குவற்கு, நிதி வழங்கப்படும்.


நடப்பு கல்வியாண்டுக்குள், அனைத்து மையங்களுக்கும் முழுமையான "காஸ்' வசதி கிடைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. 10க்கும் குறைவாக பயன்பெறும் மாணவர் எண்ணிக்கை கொண்ட மையங்களை, அருகே உள்ள சத்துணவு மையங்களோடு இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment